சிவகங்கை நகர்மன்ற கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நன்றி தெரிவித்ததற்கு கூட்டணி கட்சியான தி.மு.க உறுப்பினர்களும் எதிர்கட்சியான அ.தி.மு.க உறுப்பினர்களும் ஒன்றாக எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை நகர்மன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் நகர் மன்ற உறுப்பினர் மகேஷ் மற்றும் விஜயகுமார் இருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது எம்பி நிதியிலிருந்து சிவகங்கை மகளிர் மேல்நிலை பள்ளிக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்று தெரிவித்தனர்.
அப்போது, திமுக நகர்மன்ற உறுப்பினர் ஜெயகாந்தன் எழுந்து ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் அவர்களைப் பற்றி இங்கே பெருமை பேசக்கூடாது. அவர்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாக இருக்கும் வார்டுகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். அவர்கள் மற்ற வார்டுகளுக்கு இது போல நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. ஆகவே, அவர்களை பற்றி இந்த நகர் மன்ற கூட்டத்தில் பெருமை பேசக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
எம்.பி நிதியில் இருந்து சிவகங்கை நகருக்கு நிதி ஒதுக்கீடு செய்த ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு நகர்மன்ற கூட்டத்தில் நன்றி தெரிவிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் முயன்றனர். அப்போது, ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் குறித்து பெருமை பேசக்கூடாது என திமுக நகர்மன்ற உறுப்பினர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, அவருடன் இணைந்து அதிமுக நகர மன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சிவகங்கை நகர்மன்ற கூட்டத்தில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் பற்றி பேசுவதற்கு அதிமுக நகர் மன்ற உறுப்பினர் ராஜா எதிர்ப்பு தெரிவித்தார். சிவகங்கை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற நிதியிலிருந்து மற்ற கட்சியை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் இருக்கக்கூடிய வார்டுகளுக்கும் பாகுபாடு பார்க்காமல் நிதி ஒதுக்கீடு செய்கிறார். அதனால், பா.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரத்தை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தார். எம்பி நிதியில் இருந்து சிவகங்கை நகருக்கு நிதி ஒதுக்கீடு செய்த ப.சிதம்பரம், கார்த்தி ப.சிதம்பரம் ஆகியோருக்கு நகர்மன்ற கூட்டத்தில் காங்கிரஸ் நகர் மன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவிக்க முயன்றபோது, திமுக மற்றும் அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil