இந்தியாவில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் ஹோட்டல் தொழில் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்தாலும் தற்போது லாபத்தை நோக்கி திரும்பி கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் இந்தியாவின் முன்னணி ஹோட்டல் நிறுவனங்களில் ஒன்றான ஒபராய் குழுமம் ரூ.1500 கோடி புதிய முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
ஒபராய் ஹோட்டல் குழுமம் ஆந்திர மாநிலத்தில் ரூ.1500 கோடி புதிய முதலீடு செய்ய இருப்பதாகவும் அதற்காக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுச்சேரியின் கடன் நிலுவைத்தொகை ரூ.10,000 கோடி. CAG அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

ஓபராய் ஹோட்டல் குழுமம்
இந்தியாவின் சொகுசு ஹோட்டல் குழுமங்களில் ஒன்றான ஓபராய் குழுமம் ஆந்திராவில் பல்வேறு திட்டங்களில் 1,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. இதன் மூலம் 1,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என அதிகாரப்பூர்வ ஓபராய் குழுமம் தெரிவித்துள்ளது.

ரூ.1500 கோடி முதலீடு
ஓபராய் குழுமத்தின் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான ராஜாராமன் ஷங்கர் அவர்கள் சமீபத்தில் ஆந்திர பிரதேச மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஆந்திராவில் சுமார் ரூ.1,500 கோடி முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்ததாக அரசின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஹோட்டல்கள்
ஓபராய் ஹோட்டல் குழுமத்தின் திட்டங்கள் குறித்து முதல்வரிடம் விளக்கிய ராஜாராமன் சங்கர், விசாகப்பட்டினம், திருப்பதி, காந்திகோட்டா, பிச்சுகலங்கா மற்றும் ஹார்ஸ்லி ஹில்ஸ் ஆகிய இடங்களில் தங்களுடைய ஹோட்டல்களை புதியதாக தொடங்கவும், படேரு பகுதியில் ஒரு சுற்றுலா மையத்தை இயக்கவும் ஆர்வம் காட்டியுள்ளார்.

ஏழு நட்சத்திர ஹோட்டல்கள்
ஓபராய் குழுமம் ரூ. 1,500 கோடி ஆந்திராவில் முதலீடு செய்ய முன்வந்துள்ளதால் நேரடியாக 1,500 பேருக்கும், மறைமுகமாக 11,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஒபராய் குழுமம் ஆந்திராவில் கட்டவுள்ள அனைத்து ஹோட்டல்களையும் ஏழு நட்சத்திர வசதிகளுடன் கட்ட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் உத்தரவு
இந்நிலையில் ஆந்திராவில் ஓபராய் திட்டங்களுக்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் ஒற்றைச் சாளர முறையில் வழங்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் ஒபராய் தலைமை செயல் அதிகாரி ராஜாராமன் ஆகியோர்களின் இந்த சந்திப்பின்போது ஆந்திராவின் சுற்றுலா மற்றும் கலாச்சார துறை சிறப்பு தலைமை செயலாளர் ரஜத் பார்கவா மற்றும் சிஎம்ஓ அதிகாரிகள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Oberoi Group to invest Rs 1,500 Crore in Andhra Pradesh projects!
Oberoi Group to invest Rs 1,500 Crore in Andhra Pradesh projects! | ரூ.1500 கோடி முதலீடு செய்யும் ஓபராய் குரூப்.. எந்த மாநிலத்தில் தெரியுமா? Oberoi Group to invest Rs 1,500 Crore in Andhra Pradesh projects! | ரூ.1500 கோடி முதலீடு செய்யும் ஓபராய் குரூப்.. எந்த மாநிலத்தில் தெரியுமா?