விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: வாழைப்பழ கொழுக்கட்டை செய்வது எப்படி?


பொதுவாக விநாயகருக்கு கொழுக்கட்டை என்றாலே பிடிக்கும்.

அதிலும் நாளை விநாயகருக்கு உகந்த நாளாகும்.

இதன் போது விநாயகருக்க கொழுக்கட்டை நைவேத்தியமாக படைப்பது வழக்கம்.

அந்தவகையில் இன்று விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் வாழைப்பழ கொழுக்கட்டை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.   

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: வாழைப்பழ கொழுக்கட்டை  செய்வது எப்படி? | How To Make Banana Pudding

தேவையான பொருட்கள்:

  • கொழுக்கட்டை மாவு – 1 கப் 
  • உப்பு – சிறிதளவு
  • எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் – 2 கப்
  • வாழைப்பழம் – 4
  • தேங்காய் துருவல் – 1 கப்
  • கண்டன்ஸ்டு மில்க் – ¾ கப்
  • நெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய்ப் பொடி – 1 டீஸ்பூன்

      

செய்முறை

வாழைப் பழத்தை இரண்டாக வெட்டி, இட்லி பாத்திரத்தில் போட்டு ஆவியில் 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும். வெந்து ஆறியதும் அதன் மேல் தோலை நீக்கிவிட்டு நன்றாக மசித்துக்கொள்ளவும்.

அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் உப்பு, எண்ணெய் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். அதில் கொழுக்கட்டை மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து, கட்டி இல்லாமல் கலந்து வேக வைக்க வேண்டும்.

பூரணம் தயாரிப்பதற்கு, ஒரு வாணலியில், நெய் ஊற்றி சூடானதும், அதில் துருவிய தேங்காயைப் போட்டு 7 நிமிடம் வரை வறுக்க வேண்டும்.

பின்பு அடுப்பை அணைத்துவிட்டு, வாணலியின் சூட்டிலேயே வேக வைத்த வாழைப்பழம், கண்டன்ஸ்டு மில்க், நெய், ஏலக்காய்ப் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலந்து பூரணத்தைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

இப்போது, மேல் மாவை எடுத்து, அதைச் சிறிய கிண்ணம் போல செய்ய வேண்டும். அதற்கு நடுவில் தயார் செய்து வைத்த பூரணத்தை சிறிது வைத்து, ஓரங்களை மடித்து விட வேண்டும்.

இவ்வாறு விரும்பிய வடிவில் கொழுக்கட்டை தயார் செய்து மிதமான தீயில், ஆவியில் வேக வைத்து எடுத்தால், வாழைப்பழ கொழுக்கட்டை தயார்.

  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.