விரைவில் அதிமுக புரட்சி பயணம்… ரெடியாகும் ர.ர.,க்கள்- வியூகம் வகுத்த ஓபிஎஸ்!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், அனைவரும் கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர்

வலியுறுத்தியுள்ளார். ஆனால் கட்சியை கபளிகரம் செய்து தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஒரு கம்பெனி போல் நடத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் எடப்பாடி.

ஒருங்கிணைப்பாளர் இருக்கிற வரை எந்தவொரு சக்தியாலும் கட்சியை கையகப்படுத்த முடியாது. கூடிய விரைவில் கோவையில் ஒரு பிரம்மாண்டமான செயல் வீரர்கள் கூட்டம் நடத்தப்படும். இதனை செப்டம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் மரியாதைக்குரிய சசிகலா, தினகரன் அவர்களும் அண்ணன் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சொன்ன கருத்தை முழுமனதோடு ஏற்று கொண்டுள்ளார்கள்.

நான்கரை ஆண்டுகள்

ஆட்சி செய்திருக்கிறார். ஆனால் ஆட்சியை தக்க வைத்து கட்சியையும் வழிநடத்தியவர் ஓபிஎஸ். அவர் இல்லையெனில் எடப்பாடி யார் என்றே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே ஓ.பன்னீர்செல்வத்தை இழிவாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஓ.பி.எஸ் எங்கு சென்றாலும் தானாக வருகிற தொண்டர்கள் கூட்டம் ஒட்டுமொத்த தொண்டர்கள் அவரை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தி வருகிறார்கள்.

விரைவில் தொடங்கவுள்ள புரட்சி பயணத்தில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக செல்கிற போது ஜெயலலிதா உடன் பணியாற்றிய மூத்த நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் சந்தித்து பேசுவார். கட்சி தொண்டர்கள் அரவணைத்து செல்வர். அனைத்து தொண்டர்களும் ஓபிஎஸ் பக்கம் தான் நிற்பர். ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டு 2 முறை முதல்வராகவும்,

அவரது மறைவுக்கு பிறகு ஒரு முறை என 3 முறை முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் மீது மக்களும், தொண்டர்களும் அபரிதமான நம்பிக்கை வைத்துள்ளனர். அதிமுகவில் நீண்ட கால நிர்வாகிகளாக புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி உடன் பணியாற்றிய முன்னாள் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரையும் எடப்படியார் தொடர்ந்து புறக்கணிக்கிறார்.

கோவையில் 1500 விநாயகர் சிலைகள்; பாதுகாப்பு பணியில் 1600 போலீசார்!

ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அப்படியல்ல. கழகத்தினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அனைத்து தரப்பினரும் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அவரது உண்மை முகம் என்னவென்று தொண்டர்களுக்கு தெரியும். நல்ல முடிவெடுத்து கட்சியை வழிநடத்த உறுதுணையாக நிற்பார்கள் என்று கோவை செல்வராஜ் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.