மும்பை : சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட பாலிவுட் நடிகர் கமால் ரஷீத் கான், இரண்டு ஆண்டுகளுக்கு பின், மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.ஹிந்தியில் தேஷ்துரோகி என்ற படத்தில் நடித்த கமால் ரஷீத் கான், 47, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலம் அடைந்தார். அதன்பின், ‘யு டியூப்’ சேனல் துவக்கி, சினிமா விமர்சனம் செய்து வருகிறார்.
அமெரிக்க அதிபர் மாளிகை அலுவலகம், நம் பிரதமர் மோடியின் ‘டுவிட்டர்’ பக்கத்தை தொடர்வதை திடீரென ரத்து செய்தது. இது குறித்து, கமால் ரஷீத் கான் தன் யு டியூப் சேனலில் விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கினார்.இதைத் தொடர்ந்து, 2020ல் கொரோனா ஊரடங்கு காலத்தில், மறைந்த ஹிந்தி நடிகர்கள் இர்பான் கான் மற்றும் ரிஷி கபூர் ஆகியோர் பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்துகளை யு டியூப் சேனலில் வெளியிட்டார். இதைப் பார்த்த ஏராளமானோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, யுவசேனா என்ற அமைப்பின் தலைவர் ராகுல் கனல், மும்பை போலீசாரிடம், கமால் ரஷீத் கான் மீது 2020ல் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் துபாயில் இருந்த கமால் குறித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக் அவுட் நோட்டீஸ்’ அனுப்பினர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து மும்பைக்கு வந்த கமால் ரஷீத் கான், விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement