திட்டமிட்டபடி… ரஷ்யாவில் களமிறங்கிய சீன இராணுவம்: வெளிவரும் புதிய தகவல்


செப்டம்பர் 7ம் திகதி வரையில் முன்னெடுக்கப்படும் இந்த இராணுவ பயிற்சியில் ரஷ்யா சார்பில் 50,000 வீரர்கள் 

அமெரிக்காவுடன் இணக்கமாக இல்லாத ரஷ்யாவும் சீனாவும் சமீப காலமாக மிகவும் நெருங்கி வருவதாகவே கூறப்படுகிறது.

அமெரிக்காவுடன் பதற்றமான சூழல் இருந்துவரும் நிலையில், சீனா இராணுவத்துடன் இணைந்து ஒரு வார காலம் நீளும் இராணுவ பயிற்சி முகாமை திட்டமிட்டபடி துவங்கியுள்ளது ரஷ்யா.

உக்ரைனில் ரஷ்ய இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில்,
மிகப் பெரிய பயிற்சி திட்டங்களை ரஷ்யா முன்னெடுக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

திட்டமிட்டபடி... ரஷ்யாவில் களமிறங்கிய சீன இராணுவம்: வெளிவரும் புதிய தகவல் | Massive War Games Russia Starts With China

@reuters

செப்டம்பர் 7ம் திகதி வரையில் முன்னெடுக்கப்படும் இந்த இராணுவ பயிற்சியில் ரஷ்யா சார்பில் 50,000 வீரர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் 140 போர் விமானங்கள், 60 போர் கப்பல்கள் உட்பட 5,000 ஆயுதங்கள் பிரிவும் ஈடுபடுத்தப்பட உள்ளது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த முகாமில் முன்னாள் சோவியத் நாடுகளும், சீனா, இந்தியா, லாவோஸ், மங்கோலியா, நிகரகுவா மற்றும் சிரியா உள்ளிட்ட நட்பு நாடுகளும் பங்கேற்க உள்ளன.
அமெரிக்காவுடன் இணக்கமாக இல்லாத ரஷ்யாவும் சீனாவும் சமீப காலமாக மிகவும் நெருங்கி வருவதாகவே கூறப்படுகிறது.

மட்டுமின்றி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்த போது சீனா கருத்து தெரிவிக்க மறுத்திருந்தது.
மட்டுமின்றி, நேட்டோ விரிவாக்கத்தை ஆதரிப்பதன் மூலமும் மாஸ்கோ மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலமும் அமெரிக்கா மோதலை தூண்ட முக்கிய காரணியாக செயல்பட்டது என்றும் சீனா குற்றஞ்சாட்டியது.

திட்டமிட்டபடி... ரஷ்யாவில் களமிறங்கிய சீன இராணுவம்: வெளிவரும் புதிய தகவல் | Massive War Games Russia Starts With China

@reuters

இதற்கு கைமாறாக தைவான் தொடர்பில் நான்சி பெலோசி விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக ரஷ்யா கருத்து தெரிவித்திருந்தது.
மேலும், உக்ரைன் மற்றும் தைவானுக்கான அமெரிக்க ஆதரவை ஒப்பிட்டுப் பேசிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இவை இரண்டும் உலகளாவிய உறுதியற்ற தன்மையைத் தூண்டுவதற்கான அமெரிக்க முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்றார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.