சென்னை
:
நீண்ட
காலங்களுக்கு
பிறகு
தங்கர்
பச்சான்
இயக்கத்தில்
உருவாகி
வருகிறது
கருமேகங்கள்
கலைகின்றன
படம்.
தன்னுடைய
மகனான
விஜித்
பச்சானை
வைத்து
டக்கு
முக்கு
டிக்கு
தாளம்
படத்தை
இயக்கி
முடித்துள்ள
தங்கர்
பச்சான்
அடுத்ததாக
இந்தப்
படத்தை
இயக்கி
வருகிறார்.
இந்தப்
படத்திற்கு
ஜிவி
பிரகாஷ்
இசையமைத்துள்ள
நிலையில்
வைரமுத்து
பாடல்களை
எழுதியுள்ளார்.
இயக்குநர்
தங்கர்
பச்சான்
இயக்குநர்
தங்கர்
பச்சான்,
பல
சிறப்பான
படங்களை
கொடுத்துள்ளார்.
பள்ளிக்கூடம்
உள்ளிட்ட
படங்களின்
மூலம்
ரசிகர்களின்
உணர்வுகளை
தூண்டியவர்
இவர்.
கடந்த
2017ம்
ஆண்டில்
வெளியான
களவாடிய
பொழுதுகள்
படத்திற்கு
பிறகு
படங்களை
இயக்காமல்
இருந்த
இவர்
தற்போது
தன்னுடைய
மகன்
விஜித்தை
வைத்து
டக்கு
முக்கு
டிக்கு
தாளம்
என்ற
படத்தை
இயக்கி
முடித்துள்ளார்.

ஹீரோவாகும்
தங்கர்
பச்சான்
மகன்
டக்கு
முக்கு
டிக்கு
தாளம்
படம்
விரைவில்
ரிலீசாக
உள்ளது.
இதன்
போஸ்ட்
புரொடக்ஷன்ஸ்
பணிகள்
துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில்
அடுத்ததாக
கருமேகங்கள்
கலைகின்றன
என்ற
படத்தை
இயக்கி
வருகிறார்
தங்கர்
பச்சான்.
இந்தப்
படத்தின்
சூட்டிங்
கடந்த
ஜூலை
மாதம்
கும்பகோணத்தில்
துவங்கியது.

கருமேகங்கள்
கலைகின்றன
படம்
படத்தில்
பாரதிராஜா,
யோகிபாபு,
கௌதம்
மேனன்
ஆகிய
மூவரின்
கேரக்டர்கள்
மையப்படுத்தப்பட்டுள்ளதாக
கூறப்பட்டுள்ளது.
இந்தப்
படத்திற்கு
ஜிவி
பிரகாஷ்குமார்
இசையமைத்து
வருகிறார்.
வைரமுத்து
பாடல்களை
எழுதியுள்ளார்.
இந்நிலையில்
இந்தப்
படத்தின்
பாடல்
உருவாக்கம்
குறித்த
வீடியோ
தற்போது
வெளியாகியுள்ளது.

பாடல்
உருவாக்க
வீடியோ
பாடலின்
பிரமோஷன்கள்
உள்ளிட்டவற்றிற்கு
கூட
சமீபத்தில்
வீடியோக்கள்
வெளியாகின.
ஆனால்
பாடல்
உருவாக்கத்திற்கான
வீடியோ
வெளியாவது
இதுவே
முதல்முறை.
இந்த
வீடியோவில்
ஜிவி
பிரகாஷ்,
வைரமுத்து
மற்றும்
தங்கர்
பச்சான்
ஆகிய
மூவரும்
காணப்படுகின்றனர்.

செவ்வந்திப்
பூவே
பாடல்
ஜிவி
பாடலுக்கான
மெட்டை
கூற,
அந்த
மெட்டிற்கேற்ற
பாடல்
வரிகளை
அமைக்கிறார்
வைரமுத்து.
செவ்வந்திப்
பூவே..
செவ்வந்திப்
பூவே
என்று
பாடலின்
முதல்
வரிகளை
அவர்
பாடகராகவே
மாறி
பாடிக்
காட்டுகிறார்.
மிகவும்
அழகாக
காணப்படுகிறது
இந்த
வீடியோ.
படத்தின்
சூட்டிங்கும்
இரண்டு
கட்டங்களாக
எடுக்கப்பட்டு
வருகிறது.

அற்புதமான
படைப்பு
படத்தை
வாவ்
மீடியா
என்டர்டெயின்மெண்ட்
சார்பில்
வீரசக்தி
தயாரித்து
வருகிறார்.
இந்தப்
படம்
மனித
மனங்களின்
நுட்பமான
உணர்வுகளை
வெளிப்படுத்தும்
அற்புதமான
படைப்பு
என்று
வீரசக்தி
தெரிவித்துள்ளார்.
மேலும்
தங்கர்
பச்சானின்
அழுத்தமான
மற்றொரு
படைப்பு
இது
என்றும்
குறிப்பிட்டுள்ளார்.