தேசிய சினிமா தினம் வருகிற 16-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், தேசிய சினிமா தினத்தன்று அனைத்து வயதினரையும் ஒன்றிணைத்து திரைப்படங்கள் மூலமாக அந்த நாளை ரசிக்க வைக்கும் நோக்கிலும், திரையரங்குகள் வெற்றிகரமாக மீண்டும் திறக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையிலும் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த அறிவிப்பில், மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா, தேசிய சினிமா தினத்தை கொண்டாடும் வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “வருகிற 16-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 4000 திரைகளுக்கு டிக்கெட் கட்டணமாக ரூ.75 மட்டுமே வசூலிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த முன்னெடுப்பில் பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் உள்ளிட்ட பல பிரபல திரையரங்குகள் அதில் பங்கேற்கின்றனர்.