கெஞ்சிய பெற்றோர்… கண்டுகொள்ளாத மருத்துவமனை: பெர்த்தில் பரிதாபமாக பலியான 7 வயது சிறுமி


சுமார் 90 நிமிடங்கள் அந்த குடும்பம் அவஸ்தை – மருத்துவமனை ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை

சிறுமி ஐஸ்வர்யாவை காப்பாற்றும் வாய்ப்புகளை தவறவிட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் சிறார்களுக்கான மருத்துவமனை ஒன்றில் ஊழியர்களின் மெத்தனத்தால் 7 வயது இந்திய சிறுமி பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஈஸ்டர் சனிக்கிழமை அன்று பெர்த்தில் அமைந்துள்ள சிறார்களுக்கான மருத்துவமனையில் இக்கட்டான சூழலில் 7 வயதான சிறுமி ஐஸ்வர்யா அஸ்வத் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கெஞ்சிய பெற்றோர்... கண்டுகொள்ளாத மருத்துவமனை: பெர்த்தில் பரிதாபமாக பலியான 7 வயது சிறுமி | Perth Hospital Ignored Girl Died Heartbroken

@ninenews

ஆனால் காத்திருக்கும் அறையில் சுமார் 90 நிமிடங்கள் வரையில் அந்த குடும்பம் அவஸ்தைப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனை ஊழியர்கள் எவரும் இவர்கள் கெஞ்சுவதை கண்டுகொள்ளவில்லை எனவும் கூறுகின்றனர்.

இந்த நிலையில், குறித்த வழக்கு தொடர்பில் வெள்ளிக்கிழமை சாட்சிகள் மீதான விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.
அதில், தொடர்புடைய மருத்துவமனையானது சிறுமி ஐஸ்வர்யாவை காப்பாற்றும் வாய்ப்புகளை தவறவிட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

கெஞ்சிய பெற்றோர்... கண்டுகொள்ளாத மருத்துவமனை: பெர்த்தில் பரிதாபமாக பலியான 7 வயது சிறுமி | Perth Hospital Ignored Girl Died Heartbroken

@aapimage

மருத்துவமனை ஊழியர்கள் சிறுமி ஐஸ்வர்யா தொடர்பில் கவனம் செலுத்திய நேரம், அவர் மிக ஆபத்தான கட்டத்திற்கு சென்றிருந்தார் என்றே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாகவும், சிறுமி ஐஸ்வர்யா உரிய நேரத்தில் கவனிக்கப்படாமல் போனார் என கூறுகின்றனர்.
சிறுமி அஐஸ்வர்யாவுக்கு செப்சிஸ் இருந்துள்ளதை அங்குள்ள நர்ஸ் கருத்தில் கொள்ளவில்லை எனவும், மாறாக அவருக்கு இதயத்துடிப்பு அதிகரிப்பதை மட்டுமே அந்த நர்ஸ் கவனத்தில் எடுத்துக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

கெஞ்சிய பெற்றோர்... கண்டுகொள்ளாத மருத்துவமனை: பெர்த்தில் பரிதாபமாக பலியான 7 வயது சிறுமி | Perth Hospital Ignored Girl Died Heartbroken

@getty

பொறுப்புள்ள பெற்றோராக தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக கூறும் அஸ்வத் மற்றும் பிரசிதா சசிதரன் தம்பதி, சுகாதார கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவர அவர்களின் மகள் ஏன் இறக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், தங்கள் மகள் வாழ்க்கையில் பெரிய கனவுகளைக் கொண்டிருந்தாள் எனவும், எப்போதும் ஆசிரியராக வேண்டும் என்று கனவு கண்டாள் எனவும் கண்கலங்கியுள்ளனர்.

கெஞ்சிய பெற்றோர்... கண்டுகொள்ளாத மருத்துவமனை: பெர்த்தில் பரிதாபமாக பலியான 7 வயது சிறுமி | Perth Hospital Ignored Girl Died Heartbroken

@aapimage

மட்டுமின்றி, தங்கள் மகளின் நினைவை மதிக்கவும், இந்த விவகாரத்தில் சுகாதார அமைப்பை பொறுப்பேற்கவும் நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளனர்.
சம்பவத்தன்று மருத்துவமனை ஊழியர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும், தங்கள் கவலைகளை அவர்கள் நிராகரித்ததாகவும் அஸ்வத் மற்றும் பிரசிதா சசிதரன் தம்பதி கூறியுள்ளனர்.

விதிகளை பின்பற்றுவதாக கூறிக்கொண்டு ஒரு உயிரை துச்சமாக மதித்ததுடன், காப்பாற்றும் வாய்ப்புகள் இருந்தும் தவறவிட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.