பெய்ஜிங்,
சீனாவின் செங்டு நகரில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக நகரில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுமார் 2 கோடிக்கும் அதிகம் பேர் வசிக்கும் செங்டு நகரில் புதிதாக 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டு கொள்கையின் படி, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செங்டுவுக்குள் நுழையவோ வெளியேறவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. குடும்பத்திற்கு ஒருவர் மட்டும் வீட்டை விட்டு வெளியேறி அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :