சீனாவில் திருமணங்களின் எண்ணிக்கை 36 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2021 இல் எட்டு மில்லியனுக்கும் கீழே குறைந்துள்ளது. இது 1986 க்குப் பிறகு மிகக் குறைவு என்று அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கிறது.
இது குறைந்து வரும் பிறப்பு விகிதங்கள் மற்றும் குறைந்து வரும் மக்கள்தொகை பற்றிய கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது. இன் மூலம் 2025ல் சீனாவில் மக்கள் தொகை எண்ணிக்கை சரியும் நிலை கூட வரலாம் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், உற்பத்தி வளர்ச்சிக்கு நிலையான மக்கள் தொகை மிகவும் அவசியம். சீனாவில் ஏற்பட்டு உள்ள நிலை உலகில் பல நாடுகளில் உருவாகியுள்ளது.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் வாட்டர் பியூரிபையர் நிறுவனம்.. ரூ.1500 கோடி முதலீடு..!

சீன திருமணங்கள்
2021 ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனா முழுவதும் 7.64 மில்லியன் ஜோடிகள் மட்டுமே திருமணம் செய்து கொள்ளப் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கை 6.1 சதவீதம் குறைந்துள்ளது.

எட்டாவது ஆண்டு
சீனாவில் தொடர்ந்து எட்டாவது ஆண்டாகத் திருமணங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகச் சீனாவின் 2021 ஆம் ஆண்டில் சிவில் விவகாரங்கள் மேம்பாடு குறித்த சமீபத்திய புள்ளிவிவர புல்லட்டின் தரவுகள் கூறுகிறது.

ட்ரெண்ட்
சீனாவில் தாமதமான திருமணங்கள் தற்போது ஒரு ட்ரெண்டாக மாறியுள்ளது, இதன் மூலம் அந்நாட்டின் மூன்று குழந்தைகளை அனுமதிக்கும் கொள்கையைப் பாதிக்க உள்ளது. மக்களின் இந்த மனம்போக்கு மக்கள்தொகை பிரச்சனைக்கு மேலும் சவாலாக உள்ளது என்று சீன நிபுணர்கள் கூறுகின்றனர்.

மக்கள் தொகை
சீனாவின் மொத்த மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது மற்றும் தற்போதைய 14வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2021-25) மக்கள் தொகை சரிவை நோக்கிப் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு குழந்தை கொள்கை
சீனாவில் நீண்ட காலமாக இருந்த ஒரு குழந்தை கொள்கை 2016ல் மொத்தமாக நீக்கப்பட்டுச் சீன குடிமக்கள் அனைவரையும் இரண்டு குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று மற்றும் சில இயற்கை சீற்றம் காரணமாக ஏற்பட்ட இறப்புகள் எதிரொலியாகச் சீன அரசு முக்கியமான முடிவை எடுத்தது.

3 குழந்தைகள்
அதாவது கடந்த ஆண்டுச் சீன அரசு மக்கள் தொகை பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்து 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் கொள்கையை அமலாக்கம் செய்தது. ஆனால் மக்கள் நீண்ட காலம் ஒரு குழந்தை கான்செபட் மற்றும் விலைவாசி, வருமான பற்றாக்குறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு திருமணம் செய்வதையே தாமதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
China: lowest marriages since 1986, negative population growth fear peaks
In China Only 7.64 million couples registered to get married across the country, this reports the lowest number of marriages since 1986, and negative population growth fear peaks for the china govt. It would affect the policy to permit three children.