போட்டுத் தாக்கு.. ஒரு மாதத்தில் 24 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ் ஆப்!

வாட்ஸ் ஆப் நிறுவனம் ஜூலை மாதம் 24 லட்சம் கணக்குகளை முடக்கியதாகத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம் சென்ற ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.

அதன்படி சமூக வலைத்தளங்களில் உள்ள புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த தகவலை அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆன்லைன் பேக்கரியில் ரூ.75 கோடி வணிகம்.. மாஸ் காட்டும் 3 நண்பர்கள்.. !

சமூக வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்கள்

இந்திய புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம் விதிகளின் படி அப்படி என்ன நடவடிக்கைகளை வாட்ஸ்ஆப் நிறுவனம் எடுத்துள்ளது என அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆனால் மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான பேஸ்புக் கணக்குகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

முடக்கம்

முடக்கம்

வாட்ஸ்ஆப் செயலியில் ஜூலை மாதம் 23 லட்சத்து 87 ஆயிரம் கணக்குகள் விதிமீறல் காரணமாக முடக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் என்ன விதிமீறல் காரணமாக இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களும் தெரியவில்லை.

எப்படி
 

எப்படி

என்ன விதிமீறல்கள் என தெரிவிக்காத வாட்ஸ் ஆப் நிறுவனம் அதற்காக வந்த புகார்கள் அடிப்படையிலும், அதற்கான தொழில்நுட்பம் ஒன்றையும் உருவாக்கி வாட்ஸ்கணக்குகளீல் செய்யப்படும் விதிமீறல்களைக் கண்டறிந்து கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என மட்டும் தெரிவித்துள்ளனர்.

 புகார்கள்

புகார்கள்

வாட்ஸ்ஆப் நிறுவனத்துக்கு ஜூலை மாதம் மட்டும் 574 புகார்கள் வந்துள்ளன. வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகள் மற்றும் வெறுப்புப் பேச்சுகள் அதிகம் பரவுவதாக வரும் புகார்கள் வருவதை அடுத்து இந்த நடவடிக்கைகளை சமூக வலைத்தள நிறுவனங்கள் எடுத்து வருகின்றன.

ஜூலை மாதம்

ஜூலை மாதம்

இதே போன்று ஜூன் மாதம் 20 லட்சத்து 21 ஆயிரம் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. எனவே சமூக வலைத்தள பயனர்கள் போலி செய்திகள் மற்றும் வெறுப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்திகளைப் பரப்பாமல் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

18 மாடி, 16 மருத்துவமனை, பிரம்மாண்ட சமையலறை.. ஐஎன்எஸ் விக்ராந்த் என்ன விலை தெரியுமா?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

WhatsApp Baned 24 Lakh Indian Accounts In July. Why?

WhatsApp Baned 24 Lakh Indian Accounts In July. Why? | போட்டுத் தாக்கு.. ஒரு மாதத்தில் 24 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ் ஆப்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.