போபால்: மத்தியப் பிரதேசத்தில் 5 செக்யூரிட்டிகளை அடுத்தடுத்து கொன்ற 18 வயது வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் சாகர் மாவட்டத்தில் கடந்த 28ம் தேதி இரவில் இருந்து 31ம் தேதி இரவு வரை செக்யூரிட்டியாக வேலை செய்த 3 பேர் அடுத்தடுத்து, தலையில் பயங்கரமாக தாக்கி கொலை செய்யப்பட்டனர். இதேபோல், போபாலிலும் நேற்று முன்தினம் இருவர் கொலை செய்யப்பட்டார். இந்த தொடர் கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்டவர்களின் செல்போன்கள் காணாமல் போயிருந்தது. அந்த செல்போன் சிக்னலை வைத்து போலீசார் கொலையாளி இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து, 18 வயதுள்ள ஷிவ்பிரசாத் துருவ் என்பவனை கைது செய்தனர். விசாரணையில் தூங்கி கொண்டு இருந்த செக்யூரிட்டிகளை கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளான். ஷிவ்பிரசாத் நல்ல மனநிலையில் இருப்பதாகவும், பிரபலமாக வேண்டும் என்பதற்காக கொலைகளை செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், கேஜிஎப் என்ற திரைப்படத்தை பார்த்து, கேங்ஸ்டர் ஆக ஆசைப்பட்டு கொலை செய்ததாக அவன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
