மீண்டும் கொரோனா லாக்டவுன்… உலக மக்கள் பீதி!

சீனாவின் உகான் நகரில்தான் 2019 ஆம் ஆண்டு இறுதியில் உலக அளவில் முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கு மெல்ல மெல்ல உலக நாடுகளுக்கு பரவிய கோரொனா பல லட்சக்கணக்கான உயிர்களை பலி கொண்டது. அதனை கட்டுக்குள் கொண்டு வர கிட்டதட்ட இரண்டாண்டுகள் உலக நாடுகள் படாதபாடுபட்டன.

த்ற்போது தடுபபூசி கண்டறியப்பட்டுவிட்ட காரணத்தால் உலக அளவில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாக நம்பப்பட்டு வுரும் நிலையில் மீண்டும் அந்த பூதம் அதே சீனாவில் கிளம்பி உள்ளது.

அந்நாட்டின் சிச்சுவான் மாகாணத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செங்டு நகரம் மிகவும் முக்கியானது. சுமார் 2 கோடி பேர் வசித்துவரும் இந்நகரில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் கிட்டதட்ட 500 பேருக்கு புதிதாக கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மாகாண நிர்வாகம், தற்காலிக பொதுமுடக்கத்தை (லாக்டவுன்) அறிவித்துள்ளது. இந்த லாக்டவுன் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும், அதுவரை பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும் என்றும் மாகாண நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமும் இதை குடிக்கும் பழக்கம் இருக்கா? -அப்போ உங்களுக்கு ஆயுசு கெட்டி!

வீட்டுக்கு ஒருவர் என்ற கணக்கில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்றுள்ள நபர்கள மட்டும் காய்கறிகள், மருத்து, மாத்திரைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க சந்தைக்கு வரலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. லாக்டவுன் அமலில் இருந்தாலும் மருத்துவமனைகள், மருந்தகங்கள், சந்தைகள் உள்ளிட்டவை திறந்தே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாண்டுகளுக்கு முன்பு சீனாவில் இருந்துதான் கொரோனா பரவியது என்பதால் தற்போது அங்கு போடப்பட்டுள்ள லாக்டவுன் உலக மக்களை அச்சமடைய செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.