முத்தியால்பேட்டை ஊராட்சியில் சிதிலமடைந்த சமுதாய கூடத்தை சீரமைக்க வேண்டும்; கூடுதல் கட்டிடம் கட்டவும் கோரிக்கை

வாலாஜாபாத்: முத்தியால்பேட்டை ஊராட்சியில் சிதிலமடைந்த சமுதாய கூடத்தை சீரமைத்து, மேலும் கூடுதல் கட்டிடம் கட்டவும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டை ஊராட்சி இங்கே 2000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஈ சேவை மையம், நூலகம், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில், முத்தியால்பேட்டையில் இருந்து ஏரிவாய் செல்லும் சாலையை ஒட்டி சமுதாயக்கூடம் ஒன்று கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டன.

இந்த சமுதாய கூடத்தில்  அப்பகுதி மக்கள் காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா, பிறந்தநாள் விழா, நிச்சயதார்த்தம் உள்ளிட்ட பல்வேறு சிறு, சிறு சுப நிகழ்ச்சிகளை செய்து வந்தனர். தற்போது, இந்த சமுதாயக்கூடம் ஆங்காங்கே சுவர்கள் விரிசல், தரைகள் பெயர்ந்து காணப்படுகின்றன. இதனால் சிறு, சிறு பகுதி மக்கள் சுப நிகழ்ச்சிகளை செய்ய தனியார் திருமண மண்டபங்களை நாட வேண்டிய சூழல் நிலவுகின்றன. இதனால் பொருள் சேதமும், பண விரயம் அதிகரித்து காணப்படுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட முத்தியால்பேட்டை ஊராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகள் இருந்தும் எங்கள் கிராமத்தில் உள்ள சமுதாய கூட்டத்தை மேம்படுத்த பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை ஒன்றிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும்,  இங்குள்ள சமுதாயக்கூடத்தில் தான் சிறு, சிறு இல்ல சுப நிகழ்ச்சிகளை செய்து வந்தோம். தற்போது, இந்த சமுதாயக்கூடம் சிதலமடைந்து காணப்படுகின்றன. உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்றுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் நிதி பெற்று இந்த சமுதாய கூடத்திற்கு தேவையான சமையலறை, உணவு குடம் உள்ளிட்டவைகளை பெற்று சமுதாய கூடத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.