18 மாடி, 16 மருத்துவமனை, பிரம்மாண்ட சமையலறை.. ஐஎன்எஸ் விக்ராந்த் என்ன விலை தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொச்சியில் இந்தியாவின் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலை தொடங்கி வைத்தார்.

பாதுகாப்பு துறையில் தன்னிறைவு பெறும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த கப்பல் பிரம்மாண்டமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் 18 மாடிகள், 16 மருத்துவமனைகள், ஒரே நேரத்தில் 10 ஆயிரம் சப்பாத்திகள் செய்யும் அளவுக்கு பிரம்மாண்டமான சமையலறை ஆகியவை உள்ளன.

ஆன்லைன் பேக்கரியில் ரூ.75 கோடி வணிகம்.. மாஸ் காட்டும் 3 நண்பர்கள்.. !

 விலை

விலை

கொச்சியில் உள்ள கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் உள்நாட்டிலேயே ரூ.23000 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். பாதுகாப்பு துறையில் தன்னிறைவை நோக்கிய மத்திய அரசின் குறிப்பிடத்தக்க சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் கடின உழைப்பு

இந்தியாவின் கடின உழைப்பு

இந்த கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி பேசியபோது, ‘இன்று, கேரளாவின் கடற்கரையில், ஒவ்வொரு இந்தியனும் ஒரு புதிய எதிர்காலத்தின் சூரிய உதயத்தை காண்கிறார். ஐஎன்எஸ் விக்ராந்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, இந்தியாவின் எழுச்சி உணர்வுகளுக்கு ஒரு எடுத்துகாட்டு. விக்ராந்த் ஒரு போர்க்கப்பல் மட்டுமல்ல. 21ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் கடின உழைப்பு, திறமை, செல்வாக்கு மற்றும் அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்று’ என்று கூறினார்.

போர்க்கப்பல்
 

போர்க்கப்பல்

இந்திய கடற்படையின் உள்நாட்டு போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தில் (WDB) வடிவமைக்கப்பட்ட இந்த ஐஎன்எஸ் விக்ராந்த், கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்டது. இந்தியாவின் கப்பல் கட்டும் வரலாற்றில் இதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

 நாட்டின் பாதுகாப்பு

நாட்டின் பாதுகாப்பு

ஐஎன்எஸ் விக்ராந்த், பெரிய தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட MSMEகளை உள்ளடக்கிய பெரிய அளவிலான உள்நாட்டு உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. விக்ராந்த் இயக்கப்படுவதன் மூலம், இந்தியாவில் இரண்டு செயல்பாட்டு விமானம் தாங்கி கப்பல்கள் இருக்கும் என்பதும் இது நாட்டின் கடல் பாதுகாப்பை மேம்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 262 மீட்டர் நீளம்

262 மீட்டர் நீளம்

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் இந்திய கடற்படையின் கூற்றுப்படி, 262 மீட்டர் நீளம் கொண்டது. மேலும் இது 45,000 டன்களை சுமக்கும் திறன் கொண்டது. மேலும் விக்ராந்த் 14 தளங்களைக் கொண்டுள்ளது. இந்த கப்பலில் சுமார் 1,500 வீரர்களை ஏற்றிச் செல்ல முடியும். கப்பலின் சமையலறையில் சுமார் 10,000 சப்பாத்திகள் அல்லது ரொட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

எரிவாயு விசையாழி

எரிவாயு விசையாழி

இந்த கப்பல் நான்கு எரிவாயு விசையாழிகளால் இயக்கப்படுகிறது. மொத்தம் 88 மெகாவாட் சக்தி மற்றும் அதிகபட்ச வேகம் 28 நாட்ஸ் ஆகும். சுமார் 20,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த போர்க்கப்பலில் 16 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, 250 டேங்கர் எரிபொருள் மற்றும் 2,400 பெட்டிகள் உள்ளன.

ஐடி ஊழியர்களுக்கு எதிராக ஒன்று சேரும் டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ், ஹெச்சிஎல்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

INS Vikrant A Floating City With 18 Floors, 16-Bed Hospital: All You Need To Know It And Price Of It

INS Vikrant A Floating City With 18 Floors, 16-Bed Hospital: All You Need To Know | 18 மாடி, 16 மருத்துவமனைகள், 10 ஆயிரம் சப்பாத்தி செய்யும் சமையலறை.. ஐ.என்.எஸ் விக்ராந்த்தின் பிரமாண்டம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.