அரியலூர் மாவட்டத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் பெண் உயிரிழந்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் அல்லி நகரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி செல்லம்(52). இவர் அதிகாலை அரியலூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது அந்த வழியாக வந்த கூட்ஸ் ரயில் மோதியதில் செல்லம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த செல்லம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து அரியலூர் இரும்புபாதை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.