டில்லி: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி துரைசாமி நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும், வரும் 12ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, மூத்த நீதிபதி துரைசாமியை பொறுப்பு நீதிபதியாக அமர்த்தி குடியரசு தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி. இவர் கடந்த பிப்.,14ம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்டார். அவர் ஓய்வு பெற உள்ள நிலையில், , பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். அவர் வரும் 13ம் தேதி பதவியேற்று கொள்ள உள்ளார். புதிய தலைமை நீதிபதி அறிவிக்கப்படும் வரை நீதிபதி துரைச்சாமி, பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்படுவார்.