ஜனாதிபதி கவனத்தை ஈர்த்த ராமநாதபுரம் ஆசிரியர் ராமச்சந்திரன்.. டெல்லியில் நடந்தது என்ன?

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் தேசிய அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிப்பார்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் ராமநாதபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன், புதுச்சேரியை சேர்ந்த அரவிந்த் ராஜா உள்ளிட்ட 46 பேருக்கு டெல்லியில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நல்லாசிரியர் விருது வழங்கினார்.

தமிழ்நாட்டை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் பள்ளி சீருடையில் மேடையில் தோன்றி அனைவருக்கும் ஆச்சியத்தை ஏற்படுத்தினார். ஒரு மாணவன் போல் எளிமையான தோன்றத்துடன் வணக்கம் கூறியவாறு குடியரசுத் தலைவரை நோக்கி ஆசிரியர் ராமச்சந்திரன் நடந்து வந்து விருது வாங்கியது குடியரசுத் தலைவரது கவனத்தை ஈர்த்தது.

2022 அம்பு எய்தி அபார சாதனை

எப்போதும் எளிமையான தோற்றத்தில் காணப்படும் ஆசிரியர் ராமச்சந்திரன் மாணவ-மாணவிகளிடம் அன்போடும், கணிவோடும் நடந்துக்கொள்வார்.அரசு பள்ளி மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு இணையான தரத்துடன் வளர்த்து வருவதோடு, அந்த கிராமத்தில் படித்த இளைஞர்களுக்கு டிஎன்பிஎஸ்சி, வங்கித் தேர்வு உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார் ராமச்சந்திரன்.

எல்லாவற்றிற்கும் மேலாக கொரோனா காலத்தில் தனது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்காமல் இருக்க 30 மாணவர்களுக்கு ஆன்ராய்டு செல்போன் வாங்கிக் கொடுத்து அழகு பார்த்தவர் ராமச்சந்திரன், பள்ளியின் செயல்பாடுகளுக்கு தனியார் யூடியூப் பக்கம், தமிழர்களின் தொன்மையை அறிய நூலகம் என தனது பள்ளியை திரும்பிப் பார்க்க வைத்தவர் இவர் அதனால் தான் நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான நபர் என ராமநாதபுரம் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.