லண்டன்: பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு பெற்றதையடுத்து அந்நாட்டு உள்துறை செயலர் ப்ரீத்தி பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், பல்வேறு புகார்களுக்கு பின் பதவி விலகினார். அந்நாட்டு பிரதமராக வருபவர் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். இதற்காக நடந்த தேர்தலில் இந்திய வம்சாவளியின் ரிஷி சுனாக்கும், லிஸ் டிரஸ்சும் போட்டியிட்டனர்.இதில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்று பிரிட்டன் பிரதமராக தேர்வு பெற்றார்.
இந்நிலையில் முந்தைய பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் உள்துறை செயலராக பதவி வகித்த இந்திய வசம்சாவளி பெண் ப்ரீத்தி பட்டேல் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக பிரதமராக தேர்வு பெற்ற லிஸ் டிரஸ்க்கு ப்ரீத்தி பட்டேல் வாழ்த்து தெரிவித்தார்.
புதிய உள்துறை செயலர் நியமிக்கப்படும் வரை தற்காலிக பொறுப்பு வகிக்குமாறு ப்ரீத்தி பட்டேலை ,லிஸ் டிரஸ் கேட்டுக்கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement