சென்னை
:
போதைப்பொருள்
பற்றி
படம்
எடுக்க
முக்கியகாரணம்
இதுதான்
என
லோகேஷ்
கனகராஜ்
ஒரு
பேட்டியில்
கூறியுள்ளார்.
மாநகரம்,
கைதி,
மாஸ்டர்,
விக்ரம்
படங்களை
இயக்கி
தமிழ்
சினிமாவில்
தனக்கான
இடத்தை
பிடித்துள்ளார்
லோகேஷ்
கனகராஜ்.
இவர்
இயக்கிய
முதல்படமான
மாநகரம்
ஒரு
வித்தியாசமான
கதைக்களத்தை
கொண்ட
திரைப்படமாக
அமைந்து
வசூலைவாரிக்குவித்தது.
பாலிவுட்
கவனத்தை
ஈர்த்த
மாநகர
திரைப்படம்
இந்தியில்
மும்பைக்கார்
என்ற
பெயரில்
ரீமேக்காகி
வருகிறது.இதில்
விஜய்
சேதுபதி
நடித்து
வருகிறார்.
லோகேஷ்
கனகராஜ்
லோகேஷ்
கனகராஜ்
இயக்கத்தில்
வெளியான
விக்ரம்
திரைப்படம்
மிகப்பெரிய
பிளாக்பஸ்டர்
ஹிட்
அடித்தது.
4
படங்களை
மட்டுமே
லோகேஷ்
இயக்கி
இருந்தாலும்,
இளசுகள்
முதல்
பெரிசுகள்
வரை
லோகேஷ்
கனகராஜின்
ரசிகர்களாகவே
மாறிவிட்டனர்.
இவர்
இயக்கிய
கைதி,
மாஸ்டர்,
விக்ரம்
படங்களில்,
போதைப்பொருள்
சார்ந்த
கதைக்கரு
முக்கியமானதாக
இடம்பெற்று
இருந்தது.

காரணம்
என்ன
இந்நிலையில்,
சமீபத்தில்
பேட்டி
அளித்த
லோகேஷிடம்,
உங்களுடைய
படத்தில்
போதைபொருள்
சார்ந்து
இருப்பதற்கான
காரணம்
என்ன
என்று
கேள்வி
கேட்கப்பட்டது.
இதற்கு
பதிலளித்த
அவர்,
இன்றைய
காலகட்டத்தில்,
இளைஞர்கள்
மத்தியில்
போதை
பொருள்கள்
பயன்படுத்துவது
அதிகமாக
உள்ளது.
இதனை
முற்றிலுமாக
தடுக்க
பலரும்
முயற்சி
செய்து
வருகின்றனர்.

ரசிகர்களுக்கு
விழிப்புணர்வு
ஏற்படும்
இதனால்,
இதில்
என்
பங்கிற்கு
படத்தின்
போதைப்பொருள்கள்
குறித்தும்,
அதனால்
ஏற்படும்
விளைவுகள்
குறித்தும்
நான்
கூறுகிறேன்.
அதுவும்
உங்களுக்கு
பிடித்த
மற்றும்
பெரிய
நட்சத்திரங்கள்
நடிப்பதன்
மூலம்
அவர்களது
ரசிகர்களுக்கு
விழிப்புணர்வு
ஏற்படும்.
இதனால்
நல்ல
மாற்றம்
ஏற்படும்
என்பது
தான்
எனது
நம்பிக்கை.
அதற்காக
தான்
எனது
படங்களில்
போதை
பொருள்கள்
குறித்து
அழுத்தமாக
கூற
காரணம்
என்றார்.

தளபதி
67
லோகேஷ்
தற்போது
தளபதி
67
படத்தின்
வேலையில்
மும்முரமாக
இருக்கிறார்.
இதற்காக
இவர்
சமூக
வலைதளங்களிலிருந்து
தற்காலிகமாக
விலகி
உள்ளார்.
தனது
அடுத்தப்
படத்தின்
கதையில்
கவனம்
செலுத்துவதற்காக
சோஷியல்
மீடியாவிலிருந்து
விலகுவதாக
அவர்
கூறியிருந்தார்.
மேலும்,
தனது
நண்பர்
ரத்னகுமாருடன்
இணைந்து
தளபதி
67திரைப்படம்
குறித்து
விவாதித்து
வருகிறார்.