47 வது தேசிய மட்ட விளையாட்டு விழாவிற்கு முன்னோடியாக நடாத்தப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மட்ட விளையாட்டு விழாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 66 தங்கப்பதக்கங்களைப் பெற்று மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு சம்பியனாக தெரிவாகியுள்ளது.
வருடாந்தம் மாவட்ட மட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளுக்கிடையில் நடாத்தப்படும் குழுநிலை மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் இவ்வாண்டும் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
அதேவேளை 13 தங்கப்பதக்கங்களைப் பெற்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவு இரண்டாம் இடத்தினையும் தம்வசப்படுத்தியுள்ளது.
அத்தோடு மெய் வல்லுநர் போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவு முதலாமிடத்தினையும், இரண்டாம் இடத்தினை ஆண்கள் பிரிவில் கோறளைப்பற்று மேற்கு பிரிவும், பெண்கள் பிரிவில் மண்முனை வடக்கு பிரிவும் தம்வசப்படுத்தியுள்ளது.