ஆசிய கிண்ண ரி20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 போட்டிapy; இன்று இலங்கை, இந்திய அணிகள் போட்டியிடவுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய அணிகள் இடையே சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்நிலையில், இலங்கை அணி இன்று இந்திய அணியை எதிர்கொள்கிறது. டுபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகின்றது.
இதேவேளை ஆசியக் கிண்ண ரி20 தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதற்கமைய களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களை பெற்றது.
இதையடுத்து பாகிஸ்தான் அணி 182 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 182 ஓட்டங்கள் பெற்று வெற்றி பெற்றது.
மேலும் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் 17 போட்டிகளில் இந்தியாவும், 7 போட்டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.