சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகையாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்க்காரு வாரிப்பட்டா மற்றும் சாணிக் காயிதம் படங்கள் இவருக்கு விமர்சனரீதியாக கைக்கொடுத்துள்ளன.
தற்போது உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். விஜய்யுடனும் இவர் அடுத்தப்படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய அளவில் சிறப்பான நாயகியாக மாறியுள்ளார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான சாணிக் காயிதம் மற்றும் சர்க்காரு வாரிப்பட்டா ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

ஆக்ரோஷமான நடிப்பு
சாணிக் காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தும் கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார். தன்னுடைய குடும்பம் மற்றும் மானத்தை சின்னா பின்னப்படுத்திய ஆதிக்க வர்க்கத்தை பழிவாங்கும் கேரக்டரில் இவர் தன்னுடைய ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

சிறப்பான நடனம்
தொடர்ந்து மகேஷ் பாபுவுடன் இணைந்து முதல்முறையாக கீர்த்தி நடித்து தெலுங்கில் வெளியான சர்க்காரு வாரிப்பட்டா படத்தில் தன்னுடைய இயல்பான நடிப்பு மற்றும் நடனத்தால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்தப் படத்திற்காக கீர்த்திக்கு கட்அவுட் வைத்த சம்பவங்களும் நடந்தன.

உதயநிதியுடன் மாமன்னன் படம்
இந்நிலையில் தற்போது தமிழில் உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் வடிவேலுவும் இணைந்துள்ளது படத்தின் கூடுதல் அட்ராக்ஷனாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய்யுடனும் அடுத்தப்படத்தில் கீர்த்தி இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யுடன் மீண்டும் ஜோடி?
விஜய் -லோகேஷ் இணையும் தளபதி 67 படத்தில் கீர்த்திதான் நாயகி என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் குறித்த அறிவிப்பே இன்னும் வெளியாகாத சூழலில், அதை தொடர்ந்தே இந்த தகவல் உறுதி செய்யப்படும். தொடர்ந்து மலையாளம், தெலுங்கிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் கீர்த்தி.

கிளாமர் போட்டோஷுட்
இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் கீர்த்தி. தொடர்ந்து பல கான்செப்ட்களில் புதிய போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஹோம்லி லுக்கில் மட்டுமே நடிப்பேன் என்று சத்தியம் செய்த கீர்த்தி, தற்போது கிளாமர் ரோல்களுக்கும் ரெடி என்பதை இந்தப் புகைப்படங்கள் உறுதிப்படுத்தி வருகின்றன.

கண்களால் கைது செய்த கீர்த்தி
நெட்டட் கிளாத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த முழுநீள கவுனின் பக்கவாட்டுப் பகுதிகளில் உடல் தெரியும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹாஃப் ஒயிட்டில் இந்த பகுதி இணைக்கப்பட்டுள்ளது. இந்த உடையில் தன்னுடைய கண்களால் ரசிகர்களை கைது செய்யும் வகையிலான மிகவும் கிளாமரான போசையும் கொடுத்துள்ளார் கீர்த்தி.