சென்னை: லைகா தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பிரம்மாண்ட காவிய திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரைலர் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்.
பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவுக்கு சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய நடிகர்களே பங்கேற்காதது ஏகப்பட்ட சர்ச்சைகளை உருவாக்கியது.
இந்நிலையில், இன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ள பொன்னியின் செல்வன் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
4வது முறையாக
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை போல மணிரத்னம் எப்போது கால்ஷீட் கேட்டாலும் ஒதுக்கி விடுவார் நடிகை ஐஸ்வர்யா ராய். இருவர் படத்தில் ஆரம்பித்த அந்த நட்பு குரு, ராவணன் மற்றும் பொன்னியின் செல்வன் என 4வது முறையாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் அளவுக்கு நீடித்துக் கொண்டே போகிறது. உலக அழகி ஐஸ்வர்யா ராயை மற்ற இயக்குநர்களை விட எப்படி அழகாக காட்ட வேண்டும் என்கிற வித்தையையும் நன்கு அறிந்தவர் மணிரத்னம் தான்.

டீசர் ரிலீசுக்கு வரல
பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டுக்கு படத்தில் நந்தினி தேவியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் வருவார் என ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்தனர். ஆனால், அப்போது ஐஸ்வர்யா ராய் வரவில்லை. மேலும், தமிழ் சினிமாவை சேர்ந்த எந்தவொரு பிரபலங்களும் கலந்து கொள்ளாத நிலையில், ரொம்பவே சிம்பிளாக அந்த நிகழ்ச்சி சில மணி நேரங்களில் நடைபெற்று முடிந்தது.

சென்னை வந்த ஐஸ்வர்யா ராய்
வரும் செப்டம்பர் 30ம் தேதி பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் படம் ரிலீஸாக உள்ள நிலையில், அதனை முன்னிட்டு நடைபெற உள்ள டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கண்டிப்பாக பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நடிகை ஐஸ்வர்யா ராய் சென்னை வந்துள்ளதாக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் பரவி வருகின்றன.

பக்கா சேஃப்டி
விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் நடிகை ஐஸ்வர்யா ராய் மாஸ்க் அணிந்து பக்கா சேஃப்டி உடன் ஆள் அடையாளமே தெரியாத வண்ணம் கூட்டத்தை தவிர்க்க வந்து இறங்கிய காட்சிகளை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். மீண்டும் சியான் விக்ரம் உடன் இணைந்து ராவணன் மேடையில் பேசியதை போலவே இன்றும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியுடன் சந்திப்பு
எந்திரன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராய். 2.0 படத்தில் வெறும் டப்பிங் வாய்ஸ் மட்டும் வரும். இந்நிலையில், 12 ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் சென்னையில் பிரம்மாண்டமான மேடையில் ஐஸ்வர்யா ராய் சந்திப்பார் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.