மூணு ஹீரோவும் வேற வேறமாறி இருப்பாங்க.. பொன்னியின் செல்வன் விழாவில் பேசிய கார்த்தி, ஜெயம் ரவி!

சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் நாயகர்களான ஜெயம் ரவி மற்றும் கார்த்தி அரங்கத்திற்குள் நுழைந்ததும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

ஜெயம் ரவி பேசும் போது, இரண்டு பாகங்களையும் 155 நாட்களில் மணிரத்னம் எப்படித்தான் எடுத்து முடித்தாரோ என வியந்தார்.

கார்த்தி பேசும்போது மூணு ஹீரோவையும் வேற வேறமாறி காட்டியிருக்காரு மணிரத்னம் என பாராட்டினார்.

ரஜினி கமல் இணைந்து

பொன்னியின் செல்வன் டிரைலர் மற்றும் இசையை ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து படக்குழுவினருடன் வெளியிட்டுள்ளனர். நிகழ்ச்சிக்கு முதலில் ரஜினிகாந்த் வந்தது சோஷியல் மீடியாவில் டிரெண்டானது. அவரை தொடர்ந்து கமல்ஹாசன் வந்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக் கொண்ட புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அத்தனை நடிகைகளும்

அத்தனை நடிகைகளும்

ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபிதா துலி பாலா என பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி, குந்தவை, பூங்குழலி மற்றும் வானதி கதாபாத்திரங்களில் நடித்த அத்தனை நடிகைகளும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். மேலும், அதிதி ராவ் ஐதாரி உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்றனர்.

ஜெயம் ரவி ஆச்சர்யம்

ஜெயம் ரவி ஆச்சர்யம்

மீண்டும் எல்லாரையும் பார்த்ததும் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தது போல இருக்கிறது. அதை பற்றித்தான் பேசினோம் என ஆரம்பித்த ஜெயம் ரவி எப்படித்தான் இரு பாகங்களையும் இயக்குநர் மணிரத்னம் 155 நாட்களுக்குள் முடித்தாரோ என்பது வியப்பாக இருக்கிறது என்றார். அதற்கு படத்தில் நடித்த அத்தனை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உதவி தான் காரணம் என்றும் விளக்கமும் கொடுத்தார்.

மூணு ஹீரோவும் வேறமாறி

மூணு ஹீரோவும் வேறமாறி

அடுத்ததாக பேசிய நடிகர் பார்த்திபன், இந்த பெரிய படத்தில் ஒரு சிறிய பங்காக இருப்பது பெருமை அளிக்கிறது என்றார். அதன் பின்னர் பேசிய கார்த்தி படத்தில் நடித்துள்ள அத்தனை நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. படத்தில் சியான் விக்ரம், ஜெயம்ர் ரவி, நான் என மூன்று பேர் இருந்தால், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாறி நடிப்பையும் கதாபாத்திரத்தையும் காட்சிகளையும் செதுக்கி இருக்கிறார் மணிரத்னம். எல்லாத்தையும் இப்பவே சொல்லிடக் கூடாது. போய் படத்தை பார்த்து தெரிஞ்சுக்கோங்க என கலகலப்பாக பேசி சென்றார் கார்த்தி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.