நிர்வாணமாக கதறி அழும் இளம் பெண்கள்… டுபாக்கூர் டைரக்டரிடம் சிக்கிய ஆபாச வீடியோக்கள்

சேலம்: பொள்ளாச்சி சம்பவத்தைப் போல சேலம் மாவட்டம் எடப்பாடியில் இன்னொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

வேல் சத்ரியன் என்பவரிடம் இருந்து ஏராளமான இளம் பெண்களின் நிர்வாண வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பெண்களை நிர்வாணமாக வீடியோ எடுக்க வேல் சத்ரியனுக்கு உதவிய இளம் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

எடப்பாடியில் ஒரு பொள்ளாச்சி சம்பவம்

சில வருடங்களுக்கு முன்னர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த ஒரு சம்பவம், பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இளம் பெண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்தும், அவர்களை கதறி அழ வைத்தும் ரசித்த இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். “அண்ணா ப்ளீஸ்ண்ணா… வலிக்குது அண்ணா…” என கதறிய இளம்பெண்களின் கதறல்களுடன் வெளியான வீடியோக்கள் காண்போரைக் கண்கலங்க வைத்தது. இந்நிலையில், இதேபோல் ஒரு சம்பவம் தற்போது சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடந்தேறியுள்ளது.

நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை

நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை

எடப்பாடியைச் சேர்ந்த வேல் சத்ரியன் என்பவர், ஸ்டூடியோ நடத்தி வந்ததாகத் தெரிகிறது. மேலும், நோபல் கிரியேஷன்ஸ் என்ற பெயரில், சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருவதாக இளம் பெண்களிடம் சீன் போட்டுள்ளார். இந்த நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க வைப்பதாக பல இளம் பெண்களுக்கு ஆசை வார்த்தைகளை அள்ளித் தெளித்துள்ளார் வேல் சத்ரியன். இதனை உண்மையென நம்பிய பெண்கள், வேல் சத்ரியனிடம் பணம் கொடுத்து தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

இளம் பெண்களின் நிர்வாண வீடியோக்கள்

இளம் பெண்களின் நிர்வாண வீடியோக்கள்

சினிமாவில் நடிக்க ஆசையாக இருந்த இளம் பெண்களை கட்டம்கட்டிய வேல் சத்ரியன், அவர்களை விதவிதமாக போட்டோ எடுக்க வேண்டும் என தனது ஸ்டூடியோவுக்கு வரவழைத்துள்ளார். அப்போது அவர்களிடம் நைசாக பேச்சுக் கொடுத்த வேல் சத்ரியன், ஆசை வார்த்தை கூறி நிர்வாணமாக போட்டோ எடுத்துள்ளார். அவரது பேச்சுக்கு உடன்பட மறுத்த பெண்களை மிரட்டி வீடியோ எடுத்துள்ளதாக தெரிகிறது. இப்படியாக இவரிடம் 400க்கும் மேற்பட்ட பெண்கள் சிக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட நிர்வாண வீடியோக்கள்

பறிமுதல் செய்யப்பட்ட நிர்வாண வீடியோக்கள்

வேல் சத்ரியனின் இந்த ஏமாற்று வேலை போலீஸாருக்கு தெரியவர, அவரை கொத்தாக தூக்கியுள்ளது. மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த ஜெயதேவி என்ற இளம் பெண்ணையும் கைது செய்துள்ளனர். இதனையடுத்து வேல் சத்ரியனின் ஸ்டூடியோவை சோதனையிட்ட போலீஸார், அங்கிருந்து ஏராளமான ஆபாசப் பட வீடியோக்களையும், கேமரா, கம்யூட்டர், லேப்டாப், ஹார்ட்டிஸ்க் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

வீடியோக்களில் கதறி அழும் இளம் பெண்கள்

வீடியோக்களில் கதறி அழும் இளம் பெண்கள்

போலீஸார் பறிமுதல் செய்த வீடியோக்களில், இளம் பெண்கள் நிர்வாணமாக கதறி அழும் காட்சிகள், பதற வைத்துள்ளது. மேலும், நிர்வாணமாக வீடியோ எடுத்த இளம் பெண்களை வேல் சத்ரியன் மிரட்டியதும், அவர்களை சினிமாவில் நடிக்க வைக்காமல் ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவரிடம் ஏமாந்த இளம் பெண்கள் புகாரளிக்க, சேலம் சூரமங்கலம் காவல்நிலையத்தை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா தெரிவித்துள்ளார். அல்லது 98943 55193 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகாரளிக்கலாம் எனவும், அவர் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் சேலம் பகுதி மக்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.