துபாய்,
ஆசிய கோப்பையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற ஆபிகானிஸ்தான் அணி கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது.இதில் விராட் கோலி அதிரடி சதம் அடித்து அசத்தினார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, கடந்த சில போட்டிகளில் விளையாடியபோது ரன்குவிக்க முடியாமல் திணறினார். இதனால் பல்வேறு விமர்சனத்துக்கு ஆளானார். எனினும், அவரது ரசிகர்கள் கோலி மீண்டும் பழைய பார்முக்கு திரும்புவார் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.
விராட் கோலி கடைசியாக 2019 ஆண்டு வங்கதேசம் அணிக்கு எதிரான பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இருந்தார். நீண்ட நாட்களுக்கு பின் தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் சதமடித்துள்ளார். அவர் 61 பந்துகளில் 122 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.சிறிது நாட்களில் டி20 உலகக்கோப்பை தொடங்க இருக்கும் நிலையில் விராட் கோலி பழைய பார்முக்கு வந்து இருப்பது இந்திய ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.