சென்னை: இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் அமலா, சர்வானந்த், ரிது வர்மா, ரமேஷ் திலக், சதீஷ், நாசர் நடிப்பில் வெளியாகி இருக்கும் கணம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
30 ஆண்டுகளுக்குப் பிறகு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை அமலா.
பல டைம் டிராவல் படங்கள் வந்திருந்தாலும், அம்மா சென்டிமென்ட் என்பதால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற அமலா
அமலா, சர்வானந்த், ரிது வர்மா, ரமேஷ் திலக், சதீஷ், நாசர் போன்ற பலரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் கணம். 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடித்திருந்தாலும் ரசிகர்களை இப்படம் வெகுவாக கவர்ந்துள்ளது. அதற்கு காரணம் இப்படத்தில் உள்ள ட்ரெம் டிராவலுடன் கலந்த அம்மா சென்டிமென்ட் ஒரு முக்கிய காரணம். சரியான கதையை தேர்வு செய்து ரீ என்ட்ரி கொடுத்துள்ளதால் ரசிகர்கள் நடிகை அமலாவை கொண்டாடி வருகின்றனர். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தனது நடிப்பால் கச்சிதமாக பொருந்தும் நடிகர் நாசர் இந்த படத்திலும் சரியாக செய்துள்ளார்.

சிறுவயதிற்கு செல்லும் ஹீரோ
சிறுவயதில் விபத்தில் தன் அம்மாவை இழக்கும் ஹீரோ, டைம் டிராவல் மூலம் தனது அம்மாவை சந்திக்கும் வாய்ப்பை பெறுகிறார்.
எதிர்பாராத விபத்திலிருந்து தன் அம்மாவை ஹீரோ காப்பாற்றுகிறாரா? இல்லையா? என்பது தான் கதை. முழுக்க முழுக்க அம்மா சென்டிமென்ட்டுடன் உருவாகி இருக்கிறது இந்த கணம் திரைப்படம். டைம் டிராவல் மூலம் சிறு வயதிற்கு செல்லும் காட்சிகள் அனைத்தும் இந்த படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

அப்ளாஸ் அள்ளும் அம்மா மகன்
இந்த படத்தில் நடிகை ரிது வர்மா நடிப்பு வெகுவாக கவர்ந்துள்ளது. அம்மாவாக வந்து அனைவரையும் கவர்ந்திருக்கும் நடிகை அமலா புதிய பொலிவுடன் அம்மா கேரக்டருக்கு கச்சதமாக பொருந்தி ரசிகர்களின் மனதை கவர்கிறார். பல வருடங்களுக்குப் பிறகும் அமலாவின் ரசிகர்கள் பட்டாளம் குறையவே இல்லை என்றும் கூறலாம். சென்டிமென்ட் காட்சிகளில் அப்ளாஸ் அள்ளுகின்றனர் அமலா மற்றும் நாயகன் ஷர்வானந்த்.

அப்படியே உள்ளது
பொதுவாகவே ஓவர் பில்ட் அப் கொடுக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பிறகு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் பிளாப் ஆகி விடுகின்றது. ஆனால் இந்த கணம் திரைப்படம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் ஆவலை தூண்டியுள்ளது. டைம் டிராவால், சயின்ஸ் ஃபிக்ஷன் என குழப்பாமல் மகனுக்கும் அம்மாவுக்கான பாசத்தை மட்டுமே இயக்குநர் மையப்படுத்தி படத்தை உருவாக்கியுள்ளதே இப்படம் வெற்றிக்கு காரணம் என்று ரசிகர்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவி வருகிறது. இப்படத்திற்கான வெற்றிக்கு ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.