சென்னை : சினிமா, பைக் ரைட், துப்பாக்கிச் சுடுதல் என அனைத்தையும் ஒன்றாக பேலன்ஸ் செய்து, அனைத்திலும் டாப்பாக இருந்து வருபவர் அஜித். தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார்.
ஏகே 61 படத்தில், சஞ்சய் தத், மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷுட்டிங் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.
அதே சமயம் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள ஏகே 62 படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளை டைரக்டர் விக்னேஷ் சிவன் ஏற்கனவே துவங்கி உள்ளார்.
அஜித்
நேர்கொண்டபார்வை, வலிமை படத்தைத் தொடர்ந்த எச் வினோத்,போனிகபூர் கூட்டணி மூன்றாவது முறையாக ஏகே61 திரைப்படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து த்ரில்லர் படமாக உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

20சதவீத படப்பிடிப்பு
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. மேலும் படத்திற்கு தேவையான 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும், இன்னும் 20 சதவீத படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருப்பதாக கூறப்படுகிறது. அதை அடுத்த கட்ட படப்பிடிப்பில் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தாமதம்
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் 35 நாட்கள் பாங்காங்கில் படப்பிடிப்பு நடத்தவுள்ளதாகவும், இதுதவிர சில காட்சிகள் மட்டும் மீண்டும் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அஜித் பட பணிகள் தாமதமாகி வருவது ரசிகர்களை சோர்வடைய செய்துள்ளது. இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏகே 62 ஷுட்டிங் எப்போ
ஏகே 61 படத்தின் ஷுட்டிங் செப்டம்பரில் முடிவடைந்தவுடன் ஏகே 62 படத்தின் ஷுட்டிங் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் துவங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இது கிராமத்து சப்ஜெக்ட் என்றும், மதுரையை மையமாகக் கொண்ட கதை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், ஏகே 61 தாமதமாவால் ஏகே 62 திரைப்படமாகும் தாமதமாகும் என்று சொல்லப்படுகிறது.