சென்னை
:
நடிகை
நயன்தாரா
மற்றும்
விக்னேஷ்
சிவனின்
புதிய
போட்டோவை
பார்த்து
ரசிகர்கள்
கிண்டலடித்து
வருகின்றனர்.
போடா
போடி
படத்தின்
மூலம்
இயக்குநரான
விக்னேஷ்
சிவன்,
விஜய்
சேதுபதி,
நயன்தாராவை
வைத்து
நானும்
ரவுடிதான்
என்ற
படத்தை
இயக்கினார்.
இந்த
படத்தில்
நயன்தாராவுக்கும்
விஜய்
சேதுபதிக்கும்
கெமிஸ்டிரி
ஒர்க்கவுட்டானதோ
இல்லையோ
நயன்தாராவுக்கும்
இவருக்கும்
பக்காவாக
கெமிஸ்டிரி
வேலை
செய்தது.
இதையடுத்து
இருவரும்
காதல்
ஜோடியாக
வலம்
வந்தனர்.
தடபுடலான
திருமணம்
விக்னேஷ்
சிவன்,
நயன்தாரா
திருமணத்தை
அனைவரும்
எதிர்பார்த்திருந்த
நிலையில்,
கடந்த
ஜூன்
9ஆம்
தேதி
இவர்களது
திருமணம்
மிகவும்
கோலாகலமாக
நடந்தது.
திருமணத்திற்கு
ரஜினி,
விஜய்சேதுபதி,ஏ.ஆர்.ரஹ்மான்,சிவகார்த்திகேயன்,ஷாருக்கான்
என
ஏராளமானோர்
கலந்து
கொண்டனர்.
நெட்பிளிக்ஸ்
இவர்களின்
திருமண
வீடியோ
வெளியிடும்
உரிமைத்தை
வைத்துள்ளதால்,
விரைவில்
திருமண
வீடியோ
வெளியாக
உள்ளது.

தாய்லாந்தில்
ஹனிமூன்
திருமணம்
முடிந்த
கையோடு
திருப்பதிக்கு
சென்ற
இந்த
ஜோடி.
பின்னர்
தனது
சொந்த
ஊரான
கேரளாவிற்கு
மறுவீட்டுக்கு
சென்று
தனது
தாயை
சந்தித்துவிட்டு
அங்கிருந்து
நேராக
தாய்லாந்திற்கு
ஹனிமூன்
சென்றார்.
அங்கிருந்து
அவர்கள்
எடுத்துக்கொண்ட
புகைப்படம்
பல
லைக்குகளை
பெற்றன.

2வது
ஹானிமூன்
பின்னர்
நாடு
திரும்பிய
நயன்தாரா
அட்லி
இயக்கத்தில்
உருவாகி
வரும்
ஜவான்
படப்பிடிப்பில்
கலந்து
கொண்டார்.
அதேபோல
விக்னேஷ்
சிவனும்
ஒலிம்பியாட்
நிகழ்ச்சியை
இயக்குவதில்
பிஸியானார்.
தற்போது
இருவரும்
ஓய்வாக
இருப்பதால்
விடுமுறையை
கொண்டாட
ஸ்பெயினுக்கு
இரண்டாவது
முறையாக
ஹனிமுனை
கொண்டாடி
வருகின்றனர்.

குறையாத
ரொமான்ஸ்
இந்நிலையில்,
விக்னேஷ்
சிவன்
தனது
இன்ஸ்டாகிராம்
பக்கத்தில்
நயன்தாராவுடன்
கை
கோர்த்தபடி
இருக்கும்
போட்டோவை
ஷேர்
செய்துள்ளார்.
அதில்
இருவரும்
ஒரே
மாதிரியான
டி
ஷர்ட்
மற்றும்
ஒர
மாதிரியான
ஹேண்ட்பேக்
அணிந்து
கொண்டு,
கைகளை
கோர்த்தப்படி
நடந்து
செல்லும்
போது
பின்னால்
இருந்து
போட்டோ
எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்
அந்த
போட்டோவில்
9/9
என
குறிப்பிட்டு
ஹார்ட்டின்களுடன்
ஷேர்
செய்துள்ளார்
விக்னேஷ்
சிவன்.
இந்த
போட்டோவை
பார்த்த
நெட்டிசன்கள்,
கல்யாணமாகி
மூணு
மாசமாகியும்
குறையாத
ரொமான்ஸ்
என்றும்,
இன்னும்
ஹனிமூன்
முடியவில்லை
என்றும்
கேட்டு
வருகின்றனர்.

இருந்தாலும்
இருக்கும்
விக்னேஷ்
சிவன்
அடுத்ததாக
அஜித்தை
வைத்து
ஏ.கே.62
படத்தை
இயக்க
உள்ளார்.
இப்படத்தின்
படப்பிடிப்பு
இந்த
ஆண்டு
இறுதியில்
தொடங்கப்பட
உள்ளது.
இதற்கு
லோகேஷன்
பார்க்க
தான்
தற்போது
விக்னேஷ்
சிவன்
நயன்தாராவுடன்
ஜோடியாக
ஸ்பெயின்
நாட்டுக்கு
சென்றுள்ளதாக
கூறப்படுகிறது.
இருந்தாலும்
இருக்கும்
எதையும்
பிளான்
போட்டுத்தான்
நயன்தாரா
செய்வார்.