சென்னை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
இக்கூட்டத்தில் “ஜல் ஜீவன்” திட்டம் குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பழனிவேல் தியாகராஜன் மற்றும் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.