சென்னை:
இந்திய
சினிமாவின்
முன்னணி
நடிகரான
கமல்ஹாசனின்
மகள்களான
ஸ்ருதி
ஹாசன்,
அக்ஷரா
ஹாசன்
இருவரும்
படங்களில்
நடித்து
வருகின்றனர்.
சமீபத்தில்
சென்னையில்
நடைபெற்ற
பொன்னியின்
செல்வன்
ஆடியோ,
ட்ரெய்லர்
வெளியீட்டு
விழாவில்
கமல்
கந்துகொண்டார்.
அப்போது
கமலுடன்
எடுத்துக்கொண்ட
போட்டோவை
வெளியிட்டுள்ள
அக்ஷரா
ஹாசன்,
அப்பா
குறித்து
க்யூட்டான
கேப்ஷன்
போட்டுள்ளார்.
ஷமிதாப்பில்
அறிமுகமான
அக்ஷரா
ஹாசன்
இந்திய
திரையுலகில்
கமலின்
பெயரை
குறிப்பிடாமல்
எதையும்
பேசிடவோ,
குறிப்பிடவோ
முடியாது.
நடிப்பு
முதல்
இயக்கம்
வரை
எல்லா
ஏரியாக்களிலும்
சகலகலா
வல்லவனாக
தடம்
பதித்துள்ளார்
அவர்.
அவரது
இரண்டு
மகள்களும்
தற்போது
சினிமாவில்
தான்
பயணித்து
வருகின்றனர்.
ஸ்ருதி
ஹாசன்
முன்னணி
நாயகியாக
வளர்ந்துவிட்ட
நிலையில்,
அக்ஷரா
ஹாசன்
கிடைக்கும்
படங்களி;ல்
நடித்து
வருகிறார்.
இந்தியில்
வெளியான
‘ஷமிதாப்’
படத்தின்
மூலம்
திரைத்துறையில்
அடியெடுத்து
வைத்தார்
அவர்.

அப்பாவுடன்
எடுத்துக்கொண்ட
ஸ்டைலிஷ்
போட்டோ
லோகேஷ்
கனகராஜ்
இயக்கத்தில்
கமல்
நடித்த
விக்ரம்
திரைப்படம்
மிகப்
பெரிய
வெற்றிப்
பெற்றுள்ளது.
திரையரங்குகளில்
100
நாட்களை
கடந்துள்ள
விக்ரம்
படத்தின்
வெற்றி,
கோலிவுட்டுக்கு
பெரிய
நம்பிக்கையை
கொடுத்துள்ளது.
இந்நிலையில்,
சமீபத்தில்
நடைபெற்ற
‘பொன்னியின்
செல்வன்’
படத்தின்
இசை
மற்றும்
ட்ரெய்லர்
வெளியீட்டு
விழாவில்
சிறப்பு
விருந்தினராக
கந்துகொண்டார்.
அந்நிகழ்ச்சியில்
பங்கேற்ற
அக்ஷரா
ஹாசன்,
அப்பா
கமலுடன்
செம்ம
ஸ்டைலிஷாக
போட்டோ
எடுத்துக்கொண்டார்.

அப்பா
இருந்தால்
எல்லாமே
சிறப்பு
தான்
இந்த
போட்டோவை
தனது
இன்ஸ்டாகிராம்
பக்கத்தில்
ஷேர்
செய்துள்ள
அக்ஷரா
ஹாசன்,
அப்பா
கமல்
குறுத்து
க்யூட்டாக
கேப்ஷன்
போட்டுள்ளார்.
“நாம்
நன்றாக
இருக்க
வேண்டும்
என
அப்பா
உதவும்
போது,
நமக்கு
எல்லாமே
தனித்துவமானது
தான்”
என
பதிவிட்டுள்ளார்.
வெள்ளை
நிறத்தில்
பேண்டசியான
தாவணியில்
தேவதையாக
இருக்கும்
அக்ஷரா
ஹாசனின்
இந்தப்
புகைப்படமும்,
போஸ்ட்டும்
செம்ம
டிரெண்டிங்கில்
உள்ளது.

சினிமாவில்
வாய்பில்லாமல்
தவிப்பு
இந்தியில்
ஷமிதாப்
படம்
மூலம்
அறிமுகமான
அக்ஷரா
ஹாசன்,
அஜித்துடன்
விவேகம்,
விக்ரமுடன்
கடாரம்
கொண்டான்
ஆகிய
படங்களில்
நடித்திருந்தார்.
சமீபத்தில்
அவரது
நடிப்பில்
அமேசான்
ஓடிடியில்
வெளியான
‘அச்சம்
மடம்
நாணம்
பயிர்ப்பு’
திரைப்படம்,
கடும்
சர்ச்சையை
ஏற்படுத்தியிருந்தது.
பாய்
ஃபிரண்டுடன்
உடலுறவு
வைத்துக்
கொண்டால்,
பெண்ணுக்கு
தன்னம்பிக்கை
கிடைக்கும்
என்ற
கருத்தியலில்
உருவான
இந்தப்
படம்,
கலவையான
விமர்சனங்களை
பெற்றது
குறிப்பிடத்தக்கது.
இந்தப்
படத்தில்
ரொம்பவே
துணிச்சலான
பாத்திரத்தில்
நடித்த
அக்ஷரா
ஹாசனுக்கு,
சினிமாவில்
நடிக்க
அதிகம்
வாய்ப்பு
கிடைக்கவில்லை
என
சொல்லப்படுகிறது.