சென்னையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை.! சிறப்பு வாகனத் தணிக்கையில் 89 வாகனங்கள் பறிமுதல்.!

சென்னையில் 537 லாட்ஜ், மேன்ஷன்களில் காவல்துறை அதிரடி சிறப்பு சோதனை. சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு 89 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகரில் குற்றங்களை குறைக்கவும், தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்யவும், பழைய குற்றவாளிகளை கண்காணித்து, குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும், பல்வேறு குற்ற தடுப்பு நடவடிக்கைகளை சென்னை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சென்னையிலுள்ள தங்கும் விடுதிகளான லாட்ஜ், மேன்ஷன்களில் சோதனைகள் மேற்கொள்ளவும், முக்கிய இடங்களில் சிறப்பு வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளவும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதன் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினரால் நேற்று சிறப்பு தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
image
அதன்பேரில், சென்னை பெருநகரில் உள்ள 537 லாட்ஜுகள், மேன்ஷன்கள் என தங்கும் விடுதிகளில் காவல் குழுவினர் சோதனைகள் மேற்கொண்டனர். இந்த சோதனையில், பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா, ஆயுதங்கள், போதை பொருட்கள் வைத்துள்ளனரா என்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்கள் அல்லது பொருட்கள் குறித்து தகவல் அறிந்தால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும், உரிய அடையாள சான்று இல்லாத நபர்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம் எனவும் லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
image
தொடர்ந்து நேற்று இரவு சென்னையிலுள்ள முக்கிய இடங்கள் மற்றும் சந்திப்புகளில் தற்காலிக தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, சிறப்பு வாகனத் தணிக்கைகள் மேற்கொண்டு, 5,603 இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் மற்றும் அவற்றில் பயணித்த நபர்கள் மீது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில், மது போதை, விதிமீறல் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் ஓட்டியது தொடர்பாக 89 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Face Recognition Software என்ற முக அடையாளத்தை கொண்டு குற்ற நபர்கள் அடையாளம் காணும் FRS கேமரா மூலம் 2,264 நபர்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டு 20 பழைய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
Police Vidya Vidya Intensive Vehicle Check | போலீசார் விடிய விடிய தீவிர வாகன  சோதனை
மேலும் சென்னை பெருநகர காவல்துறையின் இந்த சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், குற்ற நபர்கள் அல்லது சந்தேக நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி, சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.