நல்லம்பள்ளி: தொப்பூர் மலைப்பாதையில் அரசு பஸ் மீது லாரி மோதி கவிழ்ந்தது. இதில் பஸ்சில் வந்த பயணிகள் 49 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சர்க்கரை மூட்டைகளை ஏற்றிய லாரி, திருச்சி சென்று கொண்டிருந்தது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் ஆஞ்சநேயர் கோயில் அருகே நேற்று முன்தினம் இரவு லாரி வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. திடீரென முன்னால் சென்ற அரசு பஸ் மீது மோதி கவிழ்ந்தது. பஸ்சில் பயணம் செய்த 49 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த தொப்பூர் போலீசார் படுகாயமடைந்த லாரி டிரைவர்கள் இரண்டு பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பயணிகளை மாற்றுப்பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
