வெல்லிங்டன்: பப்புவா நியூ கினியாவில் நேற்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் மூன்று பேர் பலியாகினர்.
பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் ஆஸ்திரேலியா அருகே தீவு நாடான பப்புவா நியூ கினியா அமைந்துள்ளது. நேற்று காலை இந்த தீவில் இருந்து ௬௬ கி.மீ., துாரத்தில் பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ஒரு நிமிடத்திற்கும் மேலாக நீடித்தது. இது, ரிக்டர் அளவில், 7.6 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் காயமடைந்தனர். இதில் வீடுகள், பெரிய கட்டடங்கள், சாலைகள் சேதமடைந்தன.
இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். கடந்த 2018ம் ஆண்டில் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 125 பேர் பலியாகினர். தற்போது ஏற்பட்ட நிலநடுக்கம் மிகவும் சக்திவாய்ந்தது மற்றும் நீண்ட நேரம் உணரப்பட்டது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement