மூலக்குளம், ஜே.ஜே., நகர், ரோம் நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அவ்வழியே செல்ல அச்சப்படுகின்றனர். வீனா, மூலக்குளம்.
குப்பை தேங்கி துர்நாற்றம்
கலிதீர்த்தாள்குப்பம், வி.வி.கோவிந்தன் நகர், நடுத்தெருவில் குப்பைகள் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. பாண்டுரங்கன், கலிதீர்த்தாள்குப்பம். குண்டும், குழியுமான சாலைகோரிமேடு, தன்வந்திரி நகர், தீயணைப்பு குடியிருப்பு பகுதியில் சாலை மிகவும் மோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். கதிரேசன், கோரிமேடு.
மாலையை வீசுவதால் இடையூறு
புதுச்சேரியில் சவ ஊர்வலத்தின் போது, மாலைகளை தெருவில் வீசுவதால் நடந்து செல்வோருக்கும், வாகனங்களில் செல்வோருக்கும் இடையூறாக உள்ளது. தண்டபாணி, சாரம்.
புதர்களால் பூச்சி தொல்லை
சாமி பிள்ளைத்தோட்டம், முதல் தெருவில் உள்ள காலி மனையில் புதர் மண்டி உள்ளதால் பாம்பு, விஷபூச்சிகள் வீட்டிற்குள் வருகிறது.கோபாலகிருஷ்ணன், சாமிபிள்ளைத்தோட்டம்.
படுமோசமான சாலையால் அவதி
தட்டாஞ்சாவடி, பாக்கமுடையான்பட்டு முத்து வாழியம்மன் கோவில் வீதி சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது.சத்தியநாராயணன், பாக்கமுடையான்பட்டு.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement