
அக்டோபரில் வாரிசு கிளைமேக்ஸ் படப்பிடிப்பு
பீஸ்ட் படத்தை அடுத்து வம்சி பைடிபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் என மாறி மாறி நடைபெற்று வந்த நிலையில் தற்போது மீண்டும் ஐதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இரண்டுகட்ட படப்பிடிப்புகளில் இப்படத்தின் வசன காட்சிகளை படமாக்கி வந்த வம்சி, தற்போது ஆக்சன் மற்றும் பாடல் காட்சிகளை படமாக்கி வருகிறார். இதற்கடுத்து அடுத்த மாதம் வாரிசு படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை படமாக்க இருப்பவர், அக்டோபர் மாதம் இறுதியோடு வாரிசு படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார். இப்படம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு திரைக்கு வருவதால் நவம்பர், டிசம்பர் என்ற இரண்டு மாதங்களில் இறுதிக்கட்ட பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.