சென்னை : ராம்சரணின் ஆர்சி15 படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் நடந்த அனுபவத்தை நடிகர் எஸ்.ஜே.சூர்யா ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
ராம்சரணின் 15வது படமான இப்படத்திற்கு ஆர்.சி.15 என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் ஜெயராம், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
எஸ்.ஜே.சூர்யா
இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர் என அடுக்கிக் கொண்டே போகும் அளவிற்கு பல துறைகளிலும் தடம் பதித்து, அவற்றில் வெற்றியும் கண்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. அஜித் நடித்த ஆசை படத்தில் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றிள்ளார். எஸ்.ஜே.சூர்யா, அடுத்ததாக அஜித்தை வைத்து வாலி படத்தை இயக்கினார்.

பல ஹிட்படங்கள்
லவ்வபுல் பாயாக வலம் வந்த அஜித்தை வில்லனாக காட்டிய பெருமை எஸ்.ஜே.சூர்யா அவர்களேயே சேரும். வாலி, குஷி, நியூ என வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த எஸ்.ஜே.சூர்யா. நியூ படத்தை தானே இயக்கி, அதில் ஹீரோவாக நடித்து தனது அடுத்த பரிமாணத்தை தொடங்கினார்.

தலைவரே..தலைவரே..மாஸ்
அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, வியாபாரி போன்ற படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் தோல்வி அடைந்தன. இதனால், படவாய்ப்பு இல்லாமல் இருந்த எஸ்.ஜே.சூர்யா, ஸ்பைடர் படத்தில் வேறு ஒரு முகத்தை காட்டினார். அதன்பின்னர்,மெர்சல், மாநாடு வரிசையாக வில்லனாக பின்னிவிட்டார். குறிப்பாக தலைவரே…தலைவரே என்று பேசும் வசனம் மாஸ்.

நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யா தற்போது ஆர்சி15 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். நான் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக இருக்கும் போதும், படப்பிடிப்பை எட்டி பார்க்கும் போதும் சரி, நண்பன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் போதும் சரி, தற்போது ஆர்.சி 15 படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் நடிக்கும் போதும் சரி, நான் ஷங்கர் அவர்களிடம் கவனித்து அது ஒன்றே ஒன்றுதான். அதே கட்டளை, அதே எனர்ஜி, அதே ஆற்றலை அப்போது பார்த்தது போல் இன்றும் அவரிடம் பார்க்கிறேன். ஷங்கர் அவர்களிடம் மீண்டும் பணிபுரிந்தது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

வேள்பாரி
இந்தியன் 2 மற்றும் ஆர்சி 15 படங்களை முடித்துவிட்டு இயக்குனர் ஷங்கர் ஒரு சரித்திரப் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படம் மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக திரைக்கதை அமைக்கும் பணியை எம்பி சு வெங்கடேசன் என்று தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.