புழல்: செங்குன்றத்தில் ஆடித்திருவிழாவை முன்னிட்டுபால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். செங்குன்றம் அடுத்த வடகரை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் தர்மராஜா கோயில் உள்ளது. இங்கு ஆடித்திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர், அருகில் உள்ள மாரியம்மன் கோயிலில் இருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்று பால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து வருகை தந்த பக்தர்களுக்கு கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
