ஆ.ராசா சர்ச்சை பேச்சு… அண்ணாமலை பகிர்ந்த வீடியோ… கொதிப்படைந்த இந்துக்கள்!

பாஜகவின் ஹெச்.ராஜா எப்படி சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர் போனவரோ, அவரை போன்றே திமுக எம்பி ஆ.ராசாவும் தமது பேச்சுகளால் அவ்வபோது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். தற்போது அவர், திமுகவின் சார்பில் நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

‘தனித் தமிழ்நாடு கேட்ட பெரியாரை ஏற்றுக் கொண்ட திமுக, அவரது இந்த கோரிக்கையில் இருந்து விலகி, இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்…’ என்று வழக்கமான தமது பாணி பேசிக் கொண்டிகுந்த ஆ.ராசா, இந்துக்களின் மனம் புண்படும்படியான ஓர் வார்த்தையால் அலர்களை குறி்ப்பி்ட்டு பேசியது தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

40 வினாடிகள் கொண்ட ஆ.ராசாவின் இந்த பேச்சு அடங்கிய வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘திமுக எம்.பி ஆ.ராசா , மற்றவர்களை திருப்திப்படுவதற்காக ஒரு சமூகத்தை தவறாக பேசி கொண்டிருக்கிறார். இத்தகைய தலைவர்களின் மனநிலை ரொம்பவும் துரதிர்ஷ்டவசமானது’ என்று அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்து கொதிப்படைந்துள்ள இந்துக்கள், இப்படி இந்துக்கள் மீது தொடர்ந்து வன்மத்தை கக்குவது சரியா, ஆ.ராசாவின் இந்த அவதூறு பேச்சுக்கு முதல்வ்ர் ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார், இந்துக்களின் வாக்கு திமுகவுக்கு வேண்டுமா, வேண்டாமா? என்றரீதியில் கேள்வியை எழுப்பிவரும் நெட்டிசன்கள், இந்த விஷயத்தை வைத்து திமுகவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

சனாதனம், சூத்திரர்களை தான் குறிப்பிடுவது போன்றுதான் மிகவும் கேவலாக மதிப்பீடு செய்துள்ளதாக ஆ.ராசா ஒருவேளை தன் பேச்சுக்கு நியாயம் கற்பிக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் எப்படியாவது கட்சியை வளர்த்துவிட வேண்டும் துடித்துக் கொண்டிருக்கும் அண்ணாமலையின் ட்விட்டர் பதிவில் இடம்பெற்றுள்ள ஆ.ராசா பேசிய வீடியோதான் பொதுமக்கள் மத்தியில் எடுப்படும். எனவே பொதுவெளியில் இதுபோன்று சர்ச்சைக்கு இடம் அளிக்கும் விதத்தில் பேசாமல் இருப்பதே ஆ.ராசாவுக்கும், திமுகவுக்கும் நல்லது என்று அறிவுறுத்துகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.