சென்னை : நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது விருமன். தற்போது இந்தப் படம் அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.
பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்துள்ளார் கார்த்தி. இவரது கேரக்டர் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி தமிழில் முதலில் பருத்தி வீரன் என்ற படத்தில்தான் நடிக்கத் துவங்கினார். முதல் படமான பருத்தி வீரன் இவருக்கு சிறப்பான என்ட்ரியை கொடுத்தது. தொடர்ந்து இவர் நடித்துவரும் அனைத்து படங்களும் ரசிகர்களின் பேவரிட்தான். இவர் நடிக்க வந்து 15 ஆண்டுகளை திரையுலகில் கடந்துள்ளார்.

15 ஆண்டுகால கேரியர்
இந்த 15 ஆண்டுகளில் இவர் ஏற்று நடிக்காத கேரக்டரே இல்லை என்று கூறும் அளவிற்கு சாக்லேட் பாய் முதல் கைதி வரை அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து முடித்துவிட்டார். இவரது நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் போலீஸ் ஆபிசராகவும் இவர் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

ஓடிடியில் வெளியான விருமன்
சமீபத்தில் முத்தையா இயக்கத்தில் இவர் நடித்து வெளியான விருமன் படம் அனைவரையும் வெகுவாக கவர்ந்து வசூல்மழை பொழிந்துள்ளது. முன்னதாக இதே கூட்டடணி கொம்பன் படத்திலும் நடித்து பட்டையை கிளப்பியிருந்தது. இந்நிலையில் திரையரங்குகளில் வெற்றிவாகை சூடிய விருமன் நேற்று முதல் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது.

மகன் கந்தன் குறித்த சவாரஸ்யம்
இந்நிலையில் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தன்னுடைய இரண்டாவது மகன் கந்தன் குறித்து மனம் திறந்துள்ளார் நடிகர் கார்த்தி. கார்த்திக்கும் ரஞ்சனி என்பவருக்கும் கடந்த 2011ல் திருமணம் முடிந்த நிலையில், இவருக்கு உமையாள் என்ற பெண் குழந்தை முதலில் பிறந்தது. ஒரு குழந்தையே போதும் என்ற மனநிலையில்தான் முதலில் கார்த்தி இருந்துள்ளார்.

மனநிலை மாறிய கார்த்தி
இந்த மனநிலை மாற காரணமாக அமைந்த சம்பவங்கள் குறித்து தற்போது பேசியுள்ளார் கார்த்தி. தனக்கு ஒருமுறை உடல்நிலை சரியில்லாத நிலையில், தன்னுடைய வீட்டிற்கு வந்த தனது தங்கை பிருந்தா, தன்னுடைய மனைவி உடனில்லாத நிலையில், தன்னையும் தனது மகளையும் சிறப்பாக பார்த்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

உடன்பிறப்புகளின் அவசியம்
இதேபோல தான் வெளிப்புற படப்பிடிப்பில் இருந்த சமயம், தன்னுடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், தன்னுடைய வீட்டிற்கு வந்த, மனைவியின் சகோதரர், தன்னுடைய குழந்தையை பள்ளிக்கு அழைத்து சென்று, ரோகினியை கூடவே இருந்து கவனித்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

மனதை மாற்றிக் கொண்ட சூர்யா
அவருக்கு இரு வாரங்களில் திருமணம் நடக்க இருந்த நிலையில், மருத்துவமனையில் தன்னுடைய மனைவி ரஞ்சனிடன் கூடவே இருந்து அவர் பார்த்துக் கொண்டதாகவும் கார்த்தி தெரிவித்தார். இதையடுத்தே, ஒருவருக்கு உடன் பிறந்தவர்களின் தேவை குறித்த புரிதல் தனக்கு ஏற்பட்டதாகவும் தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டில் கந்தன் பிறந்ததாகவும் கார்த்தி மேலும் கூறியுள்ளார்.