புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள என்ஐடி, ஐஐஐடி போன்ற ஒன்றிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற, ஜேஇஇ மெயின் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஜேஇஇ முதன்மை தேர்வில் பங்கேற்லாம். இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிக்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேரலாம். இந்த ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மை தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், 1 லட்சத்து 55 ஆயிரத்து 538 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 40,712 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 6,516 பேர் மாணவிகள். மும்பையை சேர்ந்த ஆர்.கே.ஷிசிர் 360க்கு 314 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். டெல்லியை சேர்ந்த தன்ஷிகா கப்ரா 277 மதிப்பெண்களுடன் பெண்களில் முதலிடமும், அகில இந்திய அளவில் 16வது இடமும் பிடித்துள்ளார்.
