WTA Chennai Open 2022 Day 1: அபார கம்பேக் கொடுத்த இந்தியாவின் கர்மன் தண்டி!| Live Updates

WTA Chennai Open

மற்ற இரு போட்டிகளின் முடிவுகள்

– தைவானின் E. Liang 6-4, 1-6, 3-6 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் L. Fruhvirtova-விடம் தோல்வி.

– கனடாவின் R.Marino ரஷியாவின் A.Blinkova-விற்கு எதிராக வெற்றி. Match Score: 7-5, 6-2.

முதல் சுற்றை வென்ற இந்திய வீராங்கனை கர்மன் தண்டி!

கர்மன் தண்டி

ஃபிரென்சு வீராங்கனை C.Paquet-ஐ வீழ்த்தியுள்ளார் இந்தியாவின் கர்மன் கௌர் தண்டி. முதல் செட்டை 4-6 என்று இழந்த நிலையில் அடுத்த இரண்டு செட்களையும் வென்று கம்பேக் கொடுத்துள்ளார்.

முதல் வெற்றியை ருசிப்பாரா இந்திய வீராங்கனை கர்மன் தண்டி?

இந்திய வீராங்கனை கர்மன் தண்டி களம் போட்டி சென்டர் கோர்ட்டில் தொடங்கியுள்ளது. ஃபிரென்ச் வீராங்கனை Chloé Paquet-வுடன் மோதுகிறார்.

போலந்து வீராங்கனை Katarzyna Kawa வெற்றி!

Katarzyna Kawa

ஆஸ்திரேலிய வீராங்கனை Astra Sharma 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் போலந்தின் Katarzyna Kawa

Eugenie Bouchard-க்கு எளிய வெற்றி!

Eugenie Bouchard

சென்டர் கோர்ட்டில் நடைபெற்ற போட்டியில் கனடாவின் Eugenie Bouchard சுவிட்சர்லாந்தின் Joanne Zuger-ஐ 7-6, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். Eugenie Bouchard உலக தரவரிசையில் நான்காவது இடத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் Nao Hibino வெற்றி..

Nao Hibino

Court 2-வில் நடைபெற்ற போட்டியில் க்ரோஷியாவின் Jana Fett-ஐ 6-0, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் ஜப்பானின் Nao Hibino.

புத்தம் புதிய பொலிவுடன் காணப்படும் நுங்கம்பாக்கம் SDAT டென்னிஸ் மைதானம்.

அமைச்சர் வருகை

முதல் நாள் போட்டிகளை பார்வையிட்டார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் வீ. மெய்யநாதன்.

தொடங்கியது தொடரின் பிரதான சுற்றுகள்

WTA Chennai Open 2022

முதல் போட்டியில் சுவிட்ஸர்லாந்தின் Joanne Zuger மற்றும் 2014-ம் ஆண்டு விம்பிள்டன் தொடரின் இறுதிச்சுற்று போட்டியாளரான Eugenie Bouchard ஆகியோர் மோதல்.

சென்னை ஓப்பன் 2022

Chennai Open 2022

சென்னை மாநகரில் நடைபெறும் விளையாட்டு தொடர்களுள் சென்னை ஓப்பன் டென்னிஸுக்கு ஒரு குறிப்பிடத்தக்க இடமுண்டு. ஸ்பான்சர் கிடைக்காததால் 21 ஆண்டுகளாக நடைபெற்று வந்த தொடர் புனே நகருக்கு மாற்றப்பட்டது. இப்போது மறுபடியும் இத்தொடர் சென்னை மாநகருக்கே திரும்பியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.