ராணியாருக்காக… 30 ஆண்டுகள் முன்னரே தயாரான சவப்பெட்டி: அதன் முக்கியமான சிறப்பு

அரச குடும்பத்து உறுப்பினர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களுக்கான பெட்டியும் தயாரிக்கப்படும்

ஈயம் பூசப்பட்ட பெட்டிகளில் உடல்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் – பாரம்பரிய முறையில் அடக்கம்

ராணியாரின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு திரும்பியுள்ள நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை சிறப்பு ஆராதனைக்கு பின்னர் விண்ட்சர் கோட்டையில் அமைந்துள்ள சிற்றாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

குறித்த கல்லறையில் ஏற்கனவே ஆறாவது ஜார்ஜ் மன்னர், தாயார் ராணி எலிசபெத் மற்றும் சகோதரி இளவரசி மார்கரெட் ஆகியோர் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ராணியாருக்காக... 30 ஆண்டுகள் முன்னரே தயாரான சவப்பெட்டி: அதன் முக்கியமான சிறப்பு | Queen Coffin Royal Tradition Been Revealed

@reuters

மேலும், அரச குடும்பத்தினருக்கான பெட்டகத்தில் பாதுகாக்கப்படும் இளவரசர் பிலிப்பின் உடலும், ராணியார் எலிசபெத்துடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

ராணியாரை நல்லடக்கம் செய்யவிருக்கும் பெட்டியானது 30 ஆண்டுகளுக்கு முன்னரே அவருக்கான தயாரிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனமே இளவரசர் பிலிப்புக்கான ஈயம் பூசப்பட்ட பெட்டியும் தயாரித்து அளித்துள்ளனர்.

ராணியாருக்காக... 30 ஆண்டுகள் முன்னரே தயாரான சவப்பெட்டி: அதன் முக்கியமான சிறப்பு | Queen Coffin Royal Tradition Been Revealed

@getty

அரச குடும்பத்து உறுப்பினர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்களுக்கான பெட்டியும் தயாரிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.
இதனால் தேவையற்ற கால தாமதம் ஏற்பட வாய்ப்பில்லை என்றே சில ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஈயம் பூசப்பட்ட பெட்டிகளில் அரச குடும்பத்தினரை நல்லடக்கம் செய்வது பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன் பின்னணியில் முக்கிய தகவலும் இருப்பதாக கூறுகிறார் ஆய்வாளர் ஒருவர்.

ராணியாருக்காக... 30 ஆண்டுகள் முன்னரே தயாரான சவப்பெட்டி: அதன் முக்கியமான சிறப்பு | Queen Coffin Royal Tradition Been Revealed

@PA

ஈயம் பூசப்பட்ட பெட்டிகளில் உடல்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் எனவும், காற்று உள்ளே புகாமல் மூடப்படுவதால், குறைந்தது ஓராண்டு காலம் உடல்கள் கெடாமல் அப்படியே இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே, ராணியாரின் உடலும் பாரம்பரிய முறையில் அடக்கம் செய்யப்படாமல், அரச குடும்பத்தினருக்கான பெட்டகத்தில் பாதுகாக்கப்பட உள்ளது.
மேலும், ஈயம் பூசப்படுவதால், சவப்பெட்டியாந்து 8 பேர்களால் சுமக்க வேண்டியிருக்கும் எனவும் கூறுகின்றனர்.

ராணியாருக்காக... 30 ஆண்டுகள் முன்னரே தயாரான சவப்பெட்டி: அதன் முக்கியமான சிறப்பு | Queen Coffin Royal Tradition Been Revealed

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.