சேலம் : உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது மாமன்னன் படம்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு காமெடியனாக களமிறங்கியுள்ளார் நடிகர் வடிவேலு.
முன்னதாக தான் நடிகர் வடிவேலுவின் தீவிர ரசிகர் என்றும் அவரை இயக்குவரு தனது கனவு என்றும் மாரி செல்வராஜ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் வடிவேலு
நடிகர் உதயநிதி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் மாமன்னன். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்கு பிறகு காமெடியனாகவே இணைந்துள்ளார்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம்
முன்னதாக கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நாயகனாக இணைந்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுள்ளன. இந்தப் படத்தில் நாய்களுக்கும் வடிவேலுக்கும் இடையிலான பிணைப்பு கதைக்களமாக கொள்ளப்பட்டுள்ளது.

மாமன்னன் படத்தில் வடிவேலு
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது மாமன்ன படத்தில் இணைந்துள்ளார் வடிவேலு. இந்தப் படத்தில் உதயநிதியின் தந்தையாக அவர் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக தான் வடிவேலுவின் மிகச்சிறந்த ரசிகன் என்றும் அவரை இயக்குவது தன்னுடைய கனவு என்றும் அது தற்போது நனவாகியுள்ளதாகவும் மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார்.

படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய வடிவேலு
இந்தப் படத்தில் பகத் பாசில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துவரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் மேற்கொண்டு வருகிறார். சேலத்தில் தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் வடிவேலு பிறந்தநாளை படக்குழு வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளது.

மாமன்னன் படக்குழு
நடிகர் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை அதிகாரி தமிழ் குமரன் மற்றும் மாமன்னன் படக்குழுவினருடன் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வடிவேலு ஈடுபட்டார்.

பிரம்மாண்ட கேக்
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி பிரம்மாண்டமான கேக் வரவழைக்கப்பட்டது. அந்தக் கேக்கை வெட்டிய வடிவேலு, உதயநிதி உள்ளிட்டவர்களுக்கு ஊட்டினார். வடிவேலுவுக்கு படக்குழுவினர் மாலை அணிவித்தும் பூங்கொத்துக்களை கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.