WTA Chennai Open 2022 Day 2: இந்தியாவின் அன்கீத்தா ரெய்னா தோல்வி!

Bouchard-Wickmayer ஜோடி வெற்றி!

WTA Chennai Open 2022

கோர்ட்-2-ல் நடைபெற்ற இரட்டையர் பிரிவின் R-16 போட்டியில் Bouchard-Wickmayer ஜோடி வெற்றி. K.Kawa- X.Han இணையை 6-2, 6-4 என்று எளிதாக வீழ்த்தினர்.

மற்ற போட்டிகளின் முடிவுகள்…

D. Papamichail

Court 1 : க்ரீஸின் D. Papamichail-ஐ 6-3, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார் ரஷ்ய வீராங்கனை O. Selekhmeteva

Court 2 : ஆஸ்திரேலியாவின் Olivia Tjandramulia 6-1, 6-1 என்ற நேர் செட்களில் வென்றார் கனடாவின் Carol Zhao

Court 1 : ரஷ்யாவின் M. Tkacheva-ஐ 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்றார் தொடரின் இரண்டாம் நிலை வீராங்கனை V. Gracheva

போலந்தின் Magda Linette வெற்றி!

Magda Linette

ஜப்பானின் M.Uchijima-வை 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார் போலந்து வீராங்கனை Magda Linette.

அன்கீத்தா ரெய்னா தோல்வி!

அன்கீத்தா ரெய்னா

இந்தியாவின் அன்கீத்தா ரெய்னாவுக்கு எதிரான முதல் சுற்றை 6-0, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார் T.Maria

WTA Chennai Open 2022

மற்ற இரு போட்டிகளில் முடிவுகள்:

Court 1: நெதர்லாந்தின் A. Hartono-ஐ 1-6, 2-6 என்ற நேர் செட்களில் இங்கிலாந்தின் K. Swan வீழ்த்தினார்.

Court 2 : ஜப்பானின் K. Okamura-ஐ 4-6, 3-6 என்ற நேர் செட்களில் அர்ஜென்டீன வீராங்கனை N. Podoroska வீழ்த்தினார்.

ஷரத் கமல் வருகை!

Sharath Kamal

நுங்கம்பாக்கம் SDAT டென்னிஸ் மைதானத்திற்கு டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல் வருகை.

முதல் சுற்றை வெல்வாரா அன்கீத்தா ரெய்னா?

அன்கீத்தா ரெய்னா

வைல்ட்-கார்டு போட்டியாளரான இந்தியாவின் Ankita Raina தொடரின் நான்காம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் T.Maria-வுடன் சென்டர் கோர்ட்டில் மோதல்.

Alison Riske அதிர்ச்சி தோல்வி!

WTA Chennai Open 2022

சென்னை ஓப்பன் 2022 தொடரின் முதல் நிலை வீராங்கனையான Alison Riske Amritraj முதல் சுற்றில் தோல்வி. ரஷ்யாவின் Anastasia Gasanova-விடம் 2-6, 3-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். WTA தரவரிசையில் Alison Riske 23-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

களம்காண்கிறார்  Alison Riske

Alison Riske

சென்னை ஓப்பன் டென்னிஸ் தொடரின் இரண்டாம் நாள் போட்டிகள் தொடங்கின. இன்றைய முதல் ஆட்டமாக A. Gasanova-வுடன் சென்டர் கோர்ட்டில் மோதுகிறார் தொடரின் Top Seed வீராங்கனை Alison Riske.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.