Big billion day sale: பிளிப்கார்ட் சலுகையில் ரூ.50,000 விலையில் ஐபோன் 13

சமீபத்தில்தான் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களான ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகியவை வெளியிடப்பட்டன. இந்நிலையில் முந்தைய மாடலான ஐபோன் 13 மற்றும் ஐபோன் 11 ஆகியவற்றின் விலை குறைந்து காணப்பட்டது.

தற்போது ஆன்லைன் வணிகத்தின் மாபெரும் புள்ளிகளான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகியவை தங்களது சலுகை திருவிழாவை செப்டம்பர் 23இலிருந்து துவங்க இருக்கின்றனர். அதற்காக எலக்ட்ரானிக் பொருட்களில் துவங்கி வீட்டு உபயோக பொருட்கள் வரை 80% வரை சலுகை விலையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனையொட்டி ஐபோன் 13 கிட்டத்தட்ட 20000 விலை குறைந்து 50000 விலையில் கிடைக்கும் என்பது போல் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் 4_ ,990 என்று முழு விலையையும் குறிப்பிடாமல், 50000திற்குள் ஐபோன் 13 கிடைக்கும் என்பதை சூசகமாக விளக்கியுள்ளது பிளிப்கார்ட்.

அதே பிளிப்கார்ட்டில் தற்போது 69,000 ரூபாய்க்கு ஐபோன் 13 விற்பனை ஆகி வருகிறது.ஐபோன் 14 வெளியீட்டிற்கு பிறகு ஐபோன் 13இன் அதே ப்ராசஸரை கொண்டு ஐபோன் 14உம் வெளியாகி உள்ளதால் வாடிக்கையாளர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். எனவே , அவர்களுக்கு இந்த சலுகை ஒரு ஆறுதலாக இருக்கலாம். காரணம் ஐபோன் 14 79000 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது.

இது, ஒரு அபூர்வமான சலுகை என்பதால் மிக சீக்கிரமாகவே முடிந்து விடும் வாய்ப்புகளும் உள்ளது. கடந்த முறை கூட ஐபோன் 12 இதே போல் குறைந்த விலைக்கு வெளியிடப்பட்டு வெளியான சில மணி நேரங்களிலேயே தீர்ந்து போனது குறிப்பிடதக்கது.

மேலும் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் மொபைல்கள் சலுகை விலையில் அறிவிக்கப்பட்டுள்ளன. அது குறித்த அப்டேட்டுகளை உடனுக்குடன் பெறுவதற்கு எங்களோடு இணைந்திருங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.