What to watch on Theatre & OTT? வெந்து தணிந்தது காடு மட்டுமா, இத்தனை படங்களும் இந்த வார ரிலீஸ்தான்!

வெந்து தணிந்தது காடு (தமிழ்)

வெந்து தணிந்தது காடு

எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சினம் (தமிழ்)

சினம்

G. N. R. குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கிரைம் திரில்லர் படம் ‘சினம்’. இப்படம் செப்டம்பர் 16ம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகிறது.

Aa Ammayi Gurinchi Meeku Cheppali (தெலுங்கு)

Aa Ammayi Gurinchi Meeku Cheppali

மோகன கிருஷ்ண இந்திரகாந்தி இயக்கத்தில் சுதீர் பாபு, சதீஸ் சரிப்பள்ளி, கிரித்தி ஷெட்டி ஆகியோர் நடித்துள்ள படம் Aa Ammayi Gurinchi Meeku Cheppali’. இப்படம் செப்டம்பர் 16ம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகிறது.

Saakini Daakini (தெலுங்கு)

Saakini Daakini

இளம் இயக்குநரான சுதிர் வர்மாவின் இயக்கத்தில் நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘Saakini Daakini’. இப்படம் 2017-ல் வெளியான கொரியன் படமான ‘Midnight Runner’ படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. நிவேதா தாமஸ், ரெஜினா கசாண்ட்ரா இருவரும் முன்னணி கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 16ம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகியாகிறது.

Siya (இந்தி)

Siya

பாலிவுட் திரைப்படங்கள் சமீபகாலமாகத் தொடர் தோல்விகளையே சந்தித்து வருகின்றன. அந்த வகையில் அண்மையில் வெளியான ‘பிரம்மாஸ்திரா’ படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதையடுத்து பாலிவுட்டிலிருந்து ஒரு சீரியஸான படமாக ‘Siya’ வெளியாகிறது. மனீஷ் முந்த்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் நாளை (செப்டம்பர் 16) திரையரங்குகளில் வெளியாகிறது.

Jahan Chaar Yaar (இந்தி)

Jahan Chaar Yaar

கமல் பாண்டே இயக்கத்தில் பூஜா சோப்ரா, மெஹர் விஜ், ஸ்வரா பாஸ்கர், ஷிகா தல்சானியா எனப் பெரிய பெண்கள் பட்டாளமே சூழ திருமணமான பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் இந்த ‘Jahan Chaar Yaar’. இப்படம் நாளை (செப்டம்பர் 16) திரையரங்குகளில் வெளியாகிறது.

Matto Ki Saikil (இந்தி)

Matto Ki Saikil

கட்டடத் தொழிலாளியாக வேலை செய்யும் ஒருவர் தினமும் தனது குக்கிராமத்திலிருந்து நகரத்திற்கு நீண்ட தூரம் சைக்கிளில் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவருக்கும் அவரது சைக்கிளுக்குமான நீண்ட தூரப் பயணமும் நெருக்கமும் பாசப் பிணைப்பும் நிறைந்திருக்கும் எளிமையானக் கதைதான் இப்படத்தின் கதைக்களம். இப்படம் நாளை (செப்டம்பர் 16) திரையரங்கைக் காண்கிறது.

Kotthu (மலையாளம்)

Kotthu

அரசியல் த்ரில்லர் படமான இதை இயக்குநர் சிபி இயக்கியுள்ளார். இதன் கதையை ஹேமந்த் குமார் எழுதியுள்ளார். ‘கோப்ரா’ படத்தில் வில்லனாக நடித்த ரோஷன் மேத்யூ இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Everything Everywhere All At Once (ஆங்கிலம்)

Everything Everywhere All At Once

அமெரிக்காவைச் சேர்ந்த இயக்குநர்களான டான் குவான், டேனியல் ஷீனெர்ட் இருவரும் இப்படத்தை இயக்கியுள்ளனர். மல்டிவெர்ஸ் கருவை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படம், ஏற்கெனவே பல நாடுகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தியாவில் இப்படம் நாளை (செப்டம்பர் 16) திரையரங்கைக் காண்கிறது.

Where the Crawdads Sing (ஆங்கிலம்)

Where the Crawdads Sing

ரொமான்டிக் த்ரில்லர் படமான இதை இயக்குநர் ஒலிவியா நியூமன் என்பவர் இயக்கியுள்ளார். சோனி பிக்சர்ஸ் இப்படத்தை விநியோகம் செய்கிறது. ‘Delia Owens’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

பிற படங்கள்

இது தவிர Nenu Meeku Baga Kaavaalsina Vaadini, Nenu C/O Nuvvu ஆகிய தெலுங்குப் படங்களும், Saroj Ka Rishta, Middle-Class Love ஆகிய இந்திப் படங்களும் நாளை திரையரங்குகளில் வெளியாகின்றன.

இந்த வாரம் OTT-யில் வெளியாகும் புதிய படைப்புகள்

Shiksha Mandal (Web Series) (இந்தி/தமிழ்)

Shiksha Mandal

குல்ஷன், கௌஹர் கான் மற்றும் பவன் மல்ஹோத்ரா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் சையத் அகமது அப்சல் இயக்கியுள்ளார். கல்வி என்னும் பெயரில் நடக்கும் வியாபார அரசியல் குறித்து இத்தொடர் பேசுகிறது. இந்த வெப்சீரிஸை MX Player செயலியில் பார்க்கலாம்.

Jogi (Netflix)

Jogi

1980களில் இந்தியாவில் சீக்கியர்கள் கலவரம் நிகழ்ந்து பதற்றம் நிலவிய நிலையில், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மூன்று நண்பர்கள் தங்கள் நகரத்தில் உள்ள நூற்றுக்கணக்கானவர்களைக் காப்பாற்றுவதுதான் இப்படத்தின் கதைக்களம். இந்த இந்திப் படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.

Dahan: Raakan Ka Rahasya (Hotstar)

Dahan: Raakan Ka Rahasya

நிசார்க் மேத்தா, ஷிவா பாஜ்பாய் மற்றும் நிகில் நாயர் ஆகியோரால் எழுதப்பட்டு விக்ராந்த் பவார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் வெப்சீரிஸ் இது. இது நாளை (செப்டம்பர் 16ம் தேதி) ‘Disney Plus Hotstar’ தளத்தில் வெளியாகிறது.

Goodnight Mommy (Prime Video)

Goodnight Mommy

மேட் சோபல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் படம் இந்த Goodnight Mommy. இரட்டையர்களின் தாய் முகமாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்கிறார். அவருடன் அவருடைய பழைய வீட்டில் வந்து தங்கும் சிறுவர்களுக்கு உடன் இருப்பது நிஜமாகவே அவர்களுடைய தாய்தானா என்ற சந்தேகம் வருகிறது. இப்படம் அமேசான் பிரைமில் நாளை (செப்டம்பர் 16) வெளியாகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.