பாழுங்கிணற்றில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு| Dinamalar

மாண்டியா : பாண்டவபுராவின், சந்திரே கிராமத்தில் 30 அடி ஆழ கிணற்றில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை, போலீசார், மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மீட்டனர்.மாண்டியா, பாண்டவபுராவின், சந்திரே கிராமத்தில் சாலை அருகில், 30 அடி ஆழமான பாழுங்கிணறு உள்ளது. இதில் தண்ணீர் வற்றியுள்ளது. இதில் அப்பகுதி மக்கள் தேவையற்ற கழிவுகள், குப்பை கொட்டுகின்றனர்

நேற்று காலை கிணற்றுக்குள், குழந்தையின் அழுகுரல் கேட்டது. அப்பகுதியில் வசிக்கும் சிலர், இதை கவனித்து, எட்டி பார்த்தனர். குழந்தை கிடப்பது தெரிந்தது. இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுடன், அங்கு வந்த போலீசார், பச்சிளம் ஆண் குழந்தையை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையின் உடலை எறும்புகள் கடித்துள்ளன. சிகிச்சை தொடர்கிறது.குழந்தையை கிணற்றில் வீசியவர்களை கண்டுப்பிடிக்கும் முயற்சியில் பாண்டவபுரா போலீசார் இறங்கியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.